பக்கம்:தாழம்பூ.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 14.5

ருத்ரப்பார்வையை சாராயக்காரி தவிர்த்தாள். இறுதியில் ருக்குமணி மறக்கக்கூடாததை மறந்துவிட்டு இப்போ அது நினைவுக்கு வந்ததுபோல் திடுக்கிட்டுப் பேசினாள் :

‘நல்லவேளை, இப்போதாவது ஞாபகம் வந்துட்டு. இளங்கோவோட வீட்ல போயி சேதி சொல்லி, அவங்களைக் கூட்டிட்டு வரணும். இங்கயே இரு அவங்களுக்கு நீ ஜவாப் சொல்லியாகணும். அப்புறம் உன்பாடு, அவங்கபாடு. அந்த கஸ்மாலம் சாரு ரமணன், நீ சத்தா சமுத்திரத்துக்குள்ள போனாலும் போலீஸ் வலையால வீசிப் பிடிச்சுடுவான். அவங்க வாரது வரைக்கும் இங்கயே நில்லு, சொல்றது காதுல விழுதா?”

சரோசா, காதில் விழுந்ததை கண்ணிராகக் காட்டினாள். பிறகு அதை லேசாகச் கண்டிவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டாள். நடக்கது நடக்கட்டும் என்பது மாதிரி சிறிது நின்றுவிட்டு, பிறகு ருக்குமணியைப் பார்த்துப் பதிலளித்தாள் :

“நீ நெனைக்கிறது மாதிரி நடக்காதுன்னாலும், நான் போகப் போறதில்லே. அனுமார், லவகுசாகிட்ட கட்டுப்பட்டது மாதிரி நானும் அண்ணன்கிட்டப் போகாமல், இங்கயே கட்டுப்பட்டு நிக்கேன். இளங்கோ மன்னிச்சிடுவார்னு ஒரு நம்பிக்கை. எதுக்கும் அவரு கண்விழிச்சபிறகு நீபோ இல்லாட்டி நானே கொன்னுட்டேன்னு நீ சொன்னாலும் சொல்வே.”

“ஆனாலும் உனக்கு இவ்வளவு ரப்பு ஆகாது.டி. பாவி! உன்னைக் காட்டியும் கொடுக்க முடியல. காட்டாமலும் இருக்க முடியல. உனக்கு நான் உடந்தைன்னு கடைசியில நானுகூட ஜெயிலுக்குப் போகணும். என்னவோ, அந்தப் புள்ளாண்டான் நல்ல காலம், நான் அந்தப் பக்கம் வந்தேன். என்னோட வீட்டுக்காரனத் தேடி அங்கே வந்தேனோ, இதுவப் பார்த்தேனோ. பாவி மனுசன், பஜார்ல ஒரு பங்களாம்மா விசயதசமிக்குன்னு நாலு தேங்காயும் ஒரு சீப்பு வாயப் பயமும் மூணு ஆப்பிளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/159&oldid=636603" இலிருந்து மீள்விக்கப்பட்டது