பக்கம்:தாழம்பூ.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தாழம்பூ

வாங்கி எங்கிட்டக் கொடுத்தாங்க. ‘அவசரமா கொஞ்சம் வெளியில போறேன். உன் வீட்ல வச்சுக்க, ஒரு அவருக்குப் பிறகு பங்களாவுவ வந்து கொடுத்துடு'ன்னு அந்தம்மா சொல்லிச்சு. வீட்டுக்குக் கொண்டு வந்தால், நானு மீனு கழுவிக்கிட்டு இருக்கப்போ அந்த சோமாறி அவ்வளத்தையும் தூக்கிக்கினு சாராயத்துக்கு விலை கொடுக்கப் பூட்டான். அந்தம்மா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? அதுங்கிட்டருந்து தேங்காய மீட்கறதுக்கு வந்தா நீ இந்தப் புள்ளாண்டானை தேங்காயை உடைச்சது மாதிரி உடைச்கட்டே.”

“அப்போ நீ கோவிந்தோட சம்சாரமா?”

“அது பேரு கோவிந்து இல்ல; என்ன கோவிந்தா பாட வைக்கிற கஸ்மாலம்.”

அப்படியும், இப்படியுமாய் ஒருமணி நேரம் ஆகிவிட்டது. இரண்டு பெண்களும் இளங்கோவின் அறைக் கதவை அவ்வப்போது பார்த்துக் கொண்டார்கள். திறந்தபாடில்லை. ருக்குமணி அவ்வப்போது ‘வீட்ல போய் சொல்லப் போறேன்’ என்று முருங்கை மரத்தில் ஏறியபோது, சரோசா, பெண் விக்ரமாதித்யையாக மாறினாள். இதற்குள் கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்த டாக்டரை இரண்டு பெண்களும், அவசர அவசரமாய் முண்டியடித்த அவரை உள்ளே தள்ளிக்கொண்டே அந்த அறைக்குள் போனார்கள். டாக்டர் “சீ... சீ...” என்று சொன்னபடியே கைக்குட்டையால் ஸ்டெத்தாஸ்கோப்பை துடைத்து விட்டார். பிறகு தான் குணப்படுத்திய பேஷண்டை பெருமிதம் தாங்க முடியாமல் பார்த்துக்கொண்டே நின்றார்.

கட்டிலில் கிடந்த இளங்கோவின் தலையில் சில இடங்களில் மொட்டை போடப்பட்டு, பிளாஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நெற்றிமேட்டுத் தோல் இழுத்துக் கட்டப்பட்டு வெள்ளைக் கயிறு மாதிரி ஒன்று தெரிந்தது. வாய்க்குள்ளும் நான்கைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/160&oldid=636605" இலிருந்து மீள்விக்கப்பட்டது