பக்கம்:தாழம்பூ.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 147

பிளாஸ்டர்கள். கால்களில் சின்னச் சின்னக் கட்டுக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக வலது கை கழுத்தோடு சேர்த்து வெள்ளைத் துளியில் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு ருக்குமணி “ஐயையோ” என்றபோது, டாக்டர் “பயப்படாதே. கை முறியலே. பிசகி இருக்கு சரியாயிடும். இது என்ன உன் வீட்டுக்காரனா?” என்றார்.

“எனிக்கு தம்பி சாரே.”

“அப்போ இந்த அம்மாவோட வீட்டுக்கார மச்சானா?”

அந்த இரண்டு பெண்களும் குறுஞ்சிரிப்பாய் சிரித்தபோது அவர்கள் நன்றியில்லாமல் தன்னைக் கிண்டல் செய்வதாய் அனுமானித்த டாக்டர், இன்னும் நன்றி தெரிவிக்காத அந்தப் பெண்களைப் பார்த்து, “பேஷண்டை டிஸ்டர்ப் செய்யக்கூடாது. கெட் அவுட்” என்றார். பிறகு அவரே வெளியேறி விட்டார்.

இளங்கோ, கண்விழித்தான். எல்லோரும், எல்லாமும் மங்கல் மங்கலாய்த் தெரிந்தன. அவனைப் போல் அடிபட்டுக் கிடப்பது போல் தோற்றம் காட்டின. கண்களைக் கசக்கினான். விவகாரம் மெல்ல மெல்ல விரிந்தது. அடிபட்ட வரலாறும் தெரிந்தது. ஆனால் இப்போது இருக்கும் இடம்தான் புரியவில்லை.'அம்மா என்று ஒரு தடவையும், பாமா என்று இன்னொரு தடவையும் மனதுக்குள் கூவியபடியே, தலையைத் துாக்கினான். ருக்குமணிதான் கண்ணில் பட்டாள். “எப்படியோ, மாரியாத்தா உன் கண்ணத் தெறந்துட்டா பிழைச்சுக்கிட்டே” என்றும், “நானுதான் உன்னை இங்குகொண்டு வந்தேன் சாரே. தோ, இந்த கஸ்மாலம் யாருன்னு சொல்லுப் பார்க்கலாம்?” என்று சொன்னபோது இளங்கோவுக்குப் புரிந்தது.

இளங்கோ, ருக்குமணியைப் பார்த்து சோகமாகப் புன்முறுவல் செய்தான். சரோசாவைப் பார்த்ததும் புன்முறுவலை அடக்கிக் கொண்டான். சரோசா அவன் அருகே போய், கைகளால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/161&oldid=636606" இலிருந்து மீள்விக்கப்பட்டது