பக்கம்:தாழம்பூ.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தாழம்பூ

கண்களை மூடிக் கொண்டாள். அவள் உடம்பு முகத்தோடு சேர்ந்து குலுங்கியது. ருக்குமணி இளங்கோவிடம் விளக்கமளித்தான் :

“ராத்திரில எதுக்கும்மே சூரிய நமஸ்காரம்? சாரே! இந்த தத்தேரிதான் ஒன்னை ஆள் வெச்க அடிச்சுப் போட்டது. நானு, நீ இவளுக்காகப் பட்டபாட்டைச் சொன்னாலும் சொன்னே அம்மாவுக்கு பொத்திக்கிறயுகை வருது. வீட்ல போய் சொல்லிட்டு வரட்டுமா சாரே?”

இளங்கோ சரோசாவை சிரமப்பட்டு முகம் திருப்பிப் பார்த்தான். அவளோ, அவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள். அந்தக் கைகளை விரித்து அதற்குள்ளேயே முகம் புதைத்து விம்மினாள். பிறகு அவனருகே போய் நின்று, “நானும் போலீஸ்ல சரண்டர் ஆகப் போறேன் சாரே. எனிக்கா பாடுபட்ட ஒன்ன இப்படி படாது பாடுபடுத்திட்டு நானு வெளில திரிய விரும்பல சாரே. உன் கைக்கி வெள்ளத்துணி போட்ட இந்தப்பாவி கைக்கு, இரும்பு விலங்கு போடணும் சாரே” என்று அழுதழுது சொன்னாள். அவன் ஏதாவது பேச வேண்டும் என்பதுபோல் அவன் வாயையே பார்த்தாள். இதற்குள் ருக்குமணி வெளியேறப் போனாள்.

இளங்கோ தட்டுத்தடுமாறி தலையாட்டியபடியே சொன்னான் : -

“ஆக்சிடெண்டுன்னு சொல்லு. பாமாவுக்கும் சொல்லச் சொல்லு,மறந்துடாதே ஆக்ஸிடெண்டுதான்-பைக்கிலே இருந்து கீழே விழுந்துட்டேன்.”

ருக்குமணி, இளங்கோவைப் பெருமையாகவும், சரோசாவை சிறுமையாகவும் பார்த்தபடி வெளியேறினாள். இளங்கோ முக்கல் முனங்கலோடு, சரோசாவைப் பார்த்து லேசாய் சிரிக்கப் போனான். அவள், ஏதோ பிராயச்சித்தம் செய்யப் போகிறவள்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/162&oldid=636607" இலிருந்து மீள்விக்கப்பட்டது