பக்கம்:தாழம்பூ.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 14.9

மேஜையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணியை அவன் வாயருகே கொண்டு போனாள். அவள் மனம் நோகக்கூடாது என்பதற்காக அதைக் குடித்துவிட்டு, இளங்கோ, அவளைப் போகும்படி சைகை செய்தான். அப்படியும் அவள் போகாமல் நிற்பதைப் பார்த்துவிட்டு ஒடியாத கையால் அவளை லேசாகத் தள்ளிவிட்டான். அவன் எதற்காகப் போகச் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட சரோசா, அவன் கால்களைப் பிடித்தபடியே விம்மினாள். அவன் அடிவயிற்றிலிருந்து ஒரு மூச்சை வாய்க்குக் கொண்டு வந்து, “போம்மா” என்று சத்தம் போட்டுச் சொன்னான்.

சரோசாவோ, போகுமிடமில்லாததுபோல், போக வேண்டிய இடம் பிடிக்காததுபோல் அங்கேயே நின்றாள்.

நாய்கள் கூடக் குரைக்காத நடு நிசி.

துரையின் சாராயக் கொட்டடிக்குக் கிழக்கே மண்டிக் கிடக்கும் குடிசைப் பகுதி. ஒன்றின் கவர் இன்னொன்றுக்கு கவரான தொடர் குடிசைகள். தொடர் தொடராய் சோடி சேர்ந்த குடிசைகளுக்கும், நான்கு கம்பிகள் அகல வாய்ப்பில் செருகப்பட்ட ‘ஜன்னல்கள். இந்த குடிசை வரிசைக்கு அங்கேயும் இங்கேயும் தாறுமாறாய் சிதறிக்கிடந்த தகர டப்பாக் குடிசைகள்; கோணிக்கதவுப்பொந்துகள் ஒன்றோடு ஒன்று நெருக்கித் தள்ளிக் கொண்டிருந்த குடில்கள். இதற்கு மத்தியில் ஒரு பொட்டல் வெளி. அங்கேயும் ஒரு குடிசை இருந்ததுக்கு அடையாளமாக மூங்கில் பட்டைகளும், ஒலைக் கசிவுகளும் சிதறிக்கிடந்தன. அக்கம் பக்கத்து குடிசை மகுடங்களும், அருகே இருந்த ஒரு வாகை மரமும் ஆகாயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/163&oldid=636608" இலிருந்து மீள்விக்கப்பட்டது