பக்கம்:தாழம்பூ.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தாழம்பூ

துரை, சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு முடங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், இருந்த இடத்தில் இருந்தபடியே அதட்டினான் :

“இன்னாங்கடா, ஒரு அவுரு ஆவுது, வேடிக்கைகாட்டுறீங்க.

‘குருதோஸ்துவின் சிக்னலைப்புரிந்துகொண்ட இன்னாசி, மேல் பானையை டவலைக் கொடுத்துத் துக்கிய பொழுது, கோபால் அடுப்பு விறகை சிறிது வெளியே எடுத்தான். இதற்குள், இன்னொருத்தன் அந்தப் பானையை வாங்கி, அதில் கொதித்த நீரை கீழே கொட்டிவிட்டு, மீண்டும், அதை மத்திய பானைக்குமேல் மல்லாக்க வைத்தான். இன்னொருத்தன் கீழே கிடந்த ஒரு பிளாஸ்டிக் கேனை தூக்கி அதற்குள் இருந்த தண்ணிரை அந்தப் பானையின் வாய்க்குள் தாரை வார்த்தான். அப்போது பானைத் தண்ணிர் கீழே சிந்தி நெருப்புமேல் பட்டு, அந்த நெருப்பை நாகப்பாம்பாய் சீறவைத்து, பின்னர் பூனைக்குட்டியாய் ஒப்பாளி போட வைத்தது.

துரை, உடம்பை நெளித்தபடியே கத்தினான் :

“அசல் நாட்டுப்புறண்டா நீ. தொழிலில் சுத்தம் வேணுண்டா சோமாறி.”

“நாட்டுப்புறமுன்னா, அசமந்தமுன்னு நினைக்காதண்ணா. இப்போ நமக்கே கத்துக் கொடுப்பாங்க. இந்த காச்சலையே எடுத்துக்கோ. நாம அடிக்கடி மேல்பானை தண்ணிய மாத்தறோம். ஆனா நாட்டுப்புறத்துல பம்பு செட்டு தண்ணியையே வாய்க்கால் மாதிரி அந்தப் பானை மேல விடுறாங்கோ. அந்தப் பானையோ நம்ம அண்ணாத்தே வீடு மாதிரி கம்மா கும்முன்னு குளுராவே இருக்குது. சிலரு நிலத்துலயே ஊறல ஊத்தி வைக்கிறாங்க.”

துரை, இப்போது பலமாகச் சிரித்தான்; சத்தம் போட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில், எல்லோரும் சேர்ந்து அதன் ஒலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/166&oldid=636611" இலிருந்து மீள்விக்கப்பட்டது