பக்கம்:தாழம்பூ.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 155

டிக்கியில் வைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு தடவையும் இளங்கோ, அவளை வழிமறிப்பதுபோல் இருந்தது. ருக்கு, அவளை பின் பக்கமாய்ப் பிடித்துத் தன் பக்கம் இழுப்பது போல் இருந்தது. இந்தச் சமயத்தில் ராக்கப்பன் கூப்பாடு போட்டான் :

‘அய்யோ, என் கண்ணு பூட்டே! வயிறு எரியுதே! அய்யய்யோ என் கண்னு அய்யோ என் வயிறு”

எல்லோரும் அவன் பக்கமாக ஒடி வந்தார்கள். அவன் தரையில் கருண்டு சுருண்டு நெளிந்தான். மேற்கொண்டு கத்த முடியாமல் வாய் கோணியது. கைகால்கள் வெட்டின. கழுத்து பின்பக்கமாய் திரும்பப் போனது. எல்லோருக்கும் புரிந்துவிட்டது. துரை கத்தினான்; சரோசாவை அடிக்கப்போவது போல் கைகளை ஓங்கிக்கொண்டு அதே சமயம் அந்தக் கைகளை அவள் தலையில் இறக்காமல் சத்தம் போட்டான் :

“நான் நெனச்சபடியே, அந்தப் பொட்டலத்த முக்கி முக்கி விஷச் சாராயமா ஆக்கிட்டியமே. தோ பார்! அந்தப் பொட்டலம் ஈரமா நனஞ்சிருக்கு பார். நீயல்லாம் ஒரு தொழில்காரியா? இப்போ இவன் குடும்பத்துக்கு யார் ஜவாப்பு?”

சரோசா திருப்பிக் கத்தினாள் : “நானு மொத்துனதுல விஷமாகல. அதோ அந்த ஒணா மூஞ்சி விஷத்துல இரண்டு துளிய ஊத்துறதுக்குப் பதிலா சொட்டுச் சொட்டா ஊத்துனான். அப்பவே எனிக்கு சந்தேகம்.”

“அப்போ நீ வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கே?” “சரிதாம்பா, உன் கையாலேயே எனிக்கும் ஒரு கிளாஸ் தந்துடு. அவனைப் போலவே நானும் ஆயிடுறேன். இந்தத் தொழிலு எனக்கு வேணாவேனான்னுசாயங்காலம் வாயிலும் வயித்துலுமா அடிச்சி உன்கிட்ட சொன்னேன். நீ கேட்டாத்தானே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/169&oldid=636614" இலிருந்து மீள்விக்கப்பட்டது