பக்கம்:தாழம்பூ.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தாழம்பூ

பைத்தியக்கார டாக்டரண்டே என்னையும் தோவுண்டு டெஸ்ட் பண்ணிக்கலாமுன்னு இருக்கேன். சர்தானே சாரே?”

இளங்கோ, அவளை இப்போது புதுமாதிரியாகப் பார்த்தான். அவளைப் பார்க்கப் பார்க்க, அவனுக்கே அழுகை வரும்போல் தோன்றியது. ஆகையால் அவள்மீது ஏவிவிட்ட பார்வையை தவிர்த்துவிட்டு, அங்குமிங்குமாய் பார்த்தான். அவளைப்பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, அவள் கல்லுள் மறைந்த சிற்பம்போல் தோன்றினாள். அந்த தடிப்பேறிய உடம்பிற்குள் ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதுபோல் தென்பட்டது. அவளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய பிசகாத கையை ஊன்றி இருக்கையின் முனைக்கு வந்தான். அவளை உட்காரச் சொன்னான். அவளோ நின்றுகொண்டே உட்காருவதுபோல் உடம்பை வளைத்துக் கொண்டாள். இளங்கோ, அவளை அனுதாபமாய் பார்த்தபடியே கேட்டான் :

“உன்னைப் பற்றி விவரமா சொல்லேன் சரோ” “போலீஸ் சொல்லி இருக்குமே.”

“சொல்லுச்சு. ஆனால் அந்தப் போவீகக்கு ஒருத்தரோட காரியங்கள் தான் முக்கியமே தவிர, காரணங்கள் அல்ல. ஏழைகளை வேரோடு பிடுங்கி எறியத்தான் தெரியுமே தவிர, அவுங்களோட வேரையோ, வேரடி மண்ணையோ தெரிஞ்சுக்க மாட்டாங்க. போகட்டும்; ஒன்னைத் தேடி ஸ்டேசனுக்கு ஒரு பெரியவர் வந்தாரே, அவரு யாரு?”

சரோசா, உடனடியாகப் பேசவில்லை. கண்களை உள்நோக்கிச் செலுத்தினாள். அதை நெஞ்சுக்குள் விட்டதுபோல் இமைகளை முழுமையாகக்காட்டினாள்.மனதிற்குள் மூன்று வயதுக் குழந்தையாக அழுதாள். கத்தியுடன்கூடிய கொலைகாரியாகத் தாண்டவம் ஆடினாள். பிறகு முடங்கிப்போனவள்போல்-மூலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/174&oldid=636620" இலிருந்து மீள்விக்கப்பட்டது