பக்கம்:தாழம்பூ.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 16?

கிடப்பதுபோல் பாவித்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் இமைகள் மெல்லத் திறந்தன. இளங்கோவை நிமிர்ந்து பார்த்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு, உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு, முதல் தடவையாக ஒரு தோழனைப் பார்க்கிற துயரமும் மகிழ்ச்சியும் கலந்த கலவைக் குரலில், தனது வாழ்க்கைச் சுருக்கத்தை சொன்னாள்:

“பெரிசா சொல்றதுக்கு எதுவுமே இல்லே சாரே.என் நயினா, அதான் நீ சொன்னியே - ஸ்டேசனுக்கு வந்தவர்- அவரு பர்மாவுல பெரிய கில்லாடியா இருந்திருக்கார். காரு வச்சிருக்கார், பங்களா வச்சிருக்கார் கண்ணுக்கு அயகா பொண்டாட்டி வச்சிருக்கார் ஒரு பொண்ணையும்,புள்ளாண்டானையும்பெத்திருக்கார்.அப்போஏதோ ஒலகப்போரோ ஏதோ வந்துதாமே - அதுல சப்பான்காரன் ரங்கூன்லே குண்டுபோட்டிருக்கான்.உடனே எல்லாரையும்போலே நயினாவும் துண்டக் காணோம். துணியக் காணோம்னு அடிச்சுப் புரண்டு குடும்பத்தோடநம்மநாட்டைப்பார்த்து நடந்திருக்கார் காடு மலை வழியா, சனங்களோட சனமா வந்திருக்கார். கார் வைச்ச மனுசன் காலுவீங்கி நடந்திருக்கார் காட்டுவழியிலே எத்தனையோ பேர் வயசான நயினாக்களையும், ஆத்தாக்களையும், கொயந்தைங் களையும் வழியிலேயே விட்டுட்டு, கண்ணிரும் கம்பலையுமா ஓடி வந்திருக்காங்க. ஆனா என்னோட நயினா வூட்டுக்காரியை இடுப்பிலேயும், கொயந்தைங்களை தோளிலயுமா துாக்கிட்டு வந்திருக்கார். ஆனாலும் வழிலே சப்பான்காரன் மேலே, குண்டு போடறதா நினைச்சு, வெள்ளைக்கார்ன் போட்ட குண்டுல பொண்டாட்டியும் பூட்டாள். புள்ளாண்டானும் பூட்டான். நயினா மூணு வயசு பொட்டக் குயந்தயோட தப்பிச்கட்டார். இந்த மெட்ராகக்கு வந்து சமையல்காரனா, ரிக்ஷாக்காரனா வேலை பார்த்து, தாம் பெத்தபொண்ணை ஒருத்தனுக்குக் கட்டிவச்சிருக்கார். நான் பிறந்த ஒரு வருஷத்திலேயே, அவரோட பொண்ணு என்னோட ஆத்தா - அந்த தத்தேறி முண்டை, எவனோ ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/175&oldid=636621" இலிருந்து மீள்விக்கப்பட்டது