பக்கம்:தாழம்பூ.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j62 0g

கோல்மாலை இஸ்துக்குன்னு பூட்டாளாம். அவள் மட்டும் என் கையிலே கெடச்சா, பீஸ் பீஸா கிழிச்சிடுவேன்.”

“ஏன் உடம்பை இப்படி ஆட்டறே சரோ? பொறுமையாச் சொல்லு நடந்ததை இனிமேல் மாத்த முடியாது. உன்னோட அம்மா எந்த நிலைமையிலே அப்படிப் போனாளோ?”

“அது இன்னா சாரு நிலைமை?கொயுப்பு எடுத்த நிலைமை? பயங்கரமான காட்டுலே இருந்து தோளுல தூக்கிட்டு வந்த அப்பாவை வுட்டுட்டுப் போறதுக்கு எப்படி சாரே மனக வரும்? பெத்த கொயந்தயை விட்டுட்டுப் போறவள் பொம்மனாட்டியா? போ சாரே. அவள் பேச்சை எடுக்காதே.”

“அம்மா மேலே இந்த அளவுக்கு வருகிற கோபத்தை உன் அப்பா மேலே காட்டணுமுன்னு ஏன் தோணலே?”

“என்னை அவனுக்குப் பெத்தாளோ, இல்லை எவனுக்குப் பெத்தாளோ?”

“அந்தக் கஸ்மாலப் பயலும் ஒரு வருஷத்துக்குப் பிறகு இன்னொருத்தியை இஸ்துக்குன்னு ஓடிட்டானாம். ரெண்டு பேரும் எத்தனை கை மாறினாங்களோ? விட்டுத்தள்ளு சாரே எச்சிக்கலங்கள. ஏதோ நாயினாவுக்காக காலத்தைத் தள்ளிட்டு இருக்கேன். நான் விட்ற ஒவ்வோர் மூச்சும் அவருக்குத்தான். இரும்பைத் திருடி அவருக்கு வடையா மாத்திக் கொடுக்கேன், சாராயம் கடத்தி அவரை சாகாம பாத்துக்கறேன். எப்படியோ பொயப்பு ஒடுது. ஆனாலும் ஒன்னை நானு அப்படி படுத்தியிருக்கப்படாதுதான்.”

இளங்கோ, சரோசாவை கண்களை ஆட்டாமல் பார்த்தான். தோள் பக்தம் நைந்துபோன அவள் ஜாக்கெட்டையும் முட்டிக் கால்களைக் காட்டிய அவளது கிழிந்த பைஜாமாவையும் பார்க்கப் பார்க்க, அவனுக்கு மனம் ருைந்தது. அவளையே உற்றுப்பார்த்தவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/176&oldid=636622" இலிருந்து மீள்விக்கப்பட்டது