பக்கம்:தாழம்பூ.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164. தாழம்பூ

சரோசா, முதலில் சிரித்தாள், பிறகு பேசாது இருந்தாள். அப்புறம் அவனை ஆழமாகப் பார்த்தாள்.ஒவ்வொருபார்வைக்கும் ஒரு அங்குலம் வீதமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இளங்கோ அனுமானித்தவைகளை நினைக்க நினைக்க, அவளுக்குத் தன்னைவிடபன்றிகளும்,நாய்களும் உயர்ந்தவைகளாகத் தெரிந்தன. காரணம், அவைகளுக்கு உடல் வாதைதானே தவிர மனவாதை கிடையாதே!

சரோசா எதிர்காலத்தைப் பார்க்கப் பயந்தவள் போல் முகத்தை, விரல்களால் திரையிட்டபோது, இளங்கோ அவளை ஆற்றுப் படுத்தினாள் :

“கவலைப்படாதே சரோ! உனக்குன்னு ஒரு திட்டம் வைத்திருக்கேன். ஆமாம்மா... நான் வேலை பார்க்கிற கவர்ன்மென்ட் ஆபீசிலேயே உன்னை கேஷவல் லேபரா - அதாவது அன்றாடக் கூலியாளா - சேர்க்கப் போறேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கவர்ன்மென்ட் ஆளா ஆயிடலாம். கழுதையை மேய்ச்சாலும் சர்க்கார் கழுதையை மேய்க்கனும் என்கிறது ஒனக்குத் தெரியுமா?”

சரோசா, அவனைத் தலை நிமிர்ந்து பார்த்தாள். கோணலாக இருந்த மேனியை நேர்கோடாக ஆக்கிக் கொண்டாள். அவளுக்குள்ளே பிரகாசமான ஒன்று, எதிர்காலமோ, அதுபோட்ட கோலமோ, கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அது வெந்து தணிந்து சாம்பலானது. எதையோ ஒன்றை - அழுகையோ அல்லது ஆத்திரத்தையோ-அடக்கிக்கொண்டு, அவள் இளங்கோவிடம் விரக்தியோடு சொன்னாள் :

“இப்படி ஆசை காட்டாதே சாரே. சாராயத் தொழிலில் இருந்து யாரும் கழட்டிக்க முடியாது. எங்க அண்ணாத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/178&oldid=636624" இலிருந்து மீள்விக்கப்பட்டது