பக்கம்:தாழம்பூ.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

க. சமுத்திரம் 165

வெட்டிடிடுவார். எனிக்கி தெரிஞ்சே அவரு அஞ்சு கொலை செய்திருக்கார். நானு உன் பேச்சைக் கேட்டால் நானே அவருக்கு ஆறாவது கொலை, நீ ஏழாவது.”

சரோசாவும் இளங்கோவும் ஒருவரை ஒருவர் சங்கடத்தோடும், இயலாமையோடும் பார்த்துக் கொண்டார்கள்.

சரோசா, பல்லவன் பேருந்துக்குள் ஏறியவர்களை முண்டியடித்து, அவர்களை இறக்கியபடியே, கீழே இறங்கினாள். அடி கனத்த காகிதக் கவரை அணைத்துப் பிடித்தபடியே கோவில் வளாகத்திற்குள் விழுந்தடித்து ஓடினாள். அங்கே குத்துக்காலிட்டுக் கிடக்கும் நாயினாவைக் காணவில்லை. கோவில் வளாகத்திற்கு வெளியே மீண்டும் வந்து, கண்களை அங்குமிங்குமாக அலையவிட்டாள். அந்தக் கோவில் மதில் கவருக்கு வெளியே சாத்தி வைக்கப்பட்ட பிணங்கள்போல் கிடந்த பிச்சைக் கூட்டத்தைப் பார்த்தாள். இளங்கோ, தனக்குத் தெரிவித்த எதிர்காலக் கணிப்பை மனதில் நிறுத்தியபடியே பார்த்தாள். அவிந்து போனது போல் கிடக்கும் பறட்டைத்தலை ஆயா, கால்கள் வேப்பங்குச்சியாய் வளைய தரைதட்டிய வயிற்றுடன் கிடக்கும் சப்பானிப் பையன், ரோகமேவடிவாய்புழுத்துக்கிடக்கும் தொழுநோயாளி இவர்களைப் போன்றவர்களில் ஒருத்தியாக, தான் அங்கே ஒரு காலத்தில் இருக்க வேண்டியிருக்கும் என்பதை நினைத்து, நினைத்து, அவள் நினைவற்று நின்றாள். அந்தப் பகுதியில் இப்போதே இடம் பிடிக்கப்போவது போல் பார்த்துவிட்டு அது தாளமாட்டாது கண்னை மூடிக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/179&oldid=636625" இலிருந்து மீள்விக்கப்பட்டது