பக்கம்:தாழம்பூ.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 தாழம்பூ

இந்தச்சிந்தனை பயத்தில் அவள்கரம் அந்தக்காகிதத்துக்கின் நுனிக்கு வர, அதற்குள் கிடந்த கோழி பிரியாணிப் பொட்டலமும், ஆம்லேட் பார்சலும், தனியாகக் கட்டப்பட்ட தயிர் நனைத்த வெங்காயப் பச்சடியும் கீழே விழுந்தன. கையில் கனமற்றுப் போனதை உணர்ந்து கண்திறந்த சரோசா, கீழே கிடப்பதை எடுத்து பைஜாமாக்குள்ளும், சட்டை முந்தானைக்குள்ளும் திணித்தபோது, பெரிய பொட்டலம் பிதுங்கி சிறிது சோறும், ஒரு கறித் துண்டும் கீழே விழுந்தன. அவ்வளவுதான். அந்த மதிலோரக் கூட்டம் வாய்பிளந்து அந்த இறைச்சித் துண்டையே கோரளியாகப் பார்த்தது. இதற்குள் அங்கே ஓடிவந்த சொறி நாய் அதைக் கெளவியபோது, அந்தப் பிச்சைக் கூட்டம் அந்த நாயைப் பொறாமையாகப் பார்ப்பதுபோல் பார்த்தது. சரோசாவையும் அண்ணாந்து பார்த்தது. அவள் பார்வையைப் புரிந்துகொண்ட பறட்டைத்தலை ஆயா, அவள் நயினா போன இடத்தை கைநீட்டி கட்டிக்காட்டினாள். பஸ் நிலையம் இருக்கும் திசை,

சரோசா உடனடியாக நகரவில்லை. அந்தக் கூட்டத்தையே வெறித்துப் பார்த்தாள். வருடக்கணக்கில் பார்த்துப் பழகிய அந்தக் கூட்டம், இப்போது வேறு விதமாய் தோன்றியது. அவர்கள் பார்வையில், இவள் பார்வை இருளாகியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இடது கையை ஜாக்கெட்டுக்குள் விட்டு இருபது ரூபாய் நோட்டை வெளியே கொண்டு வந்தாள். அந்தக் கூட்டத்தில் வஸ்தாவாகத் தோன்றிய ஒரு குச்சிக் கிழவனிடம் அந்த நோட்டைத் திணித்து,"அல்லாருக்கும் சில்லரை மாத்தி சரிசமமாகக் கொடு” என்றாள். சிலர் இரண்டு ரூபாய் கிடைக்கும் ஆனந்தத்தில் முகம் தூக்கினார்கள். சிலர், அந்தப் பிரக்ஞையே இல்லாமல் அப்படியே கிடந்தார்கள்.

சரோசா, பஸ் நிலையம் பக்கம் வந்தாள். அப்படி வரும்போது இளங்கோவை நினைத்துக் கொண்டாள். அந்தப் பிச்சைக் கூட்டத்தின் ஆனந்தத்துக்கு அவனே காரணம். இன்றைக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/180&oldid=636627" இலிருந்து மீள்விக்கப்பட்டது