பக்கம்:தாழம்பூ.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 தாழம்பூ

நான் உயிரோட இருக்கபோவே பிச்சை எடுக்கிறியா? காச, அவரண்ட நீட்டு” என்றாள். அப்போதுதான், அந்தக்காக கையில் விழுந்த உணர்வைப் பெற்ற நாய்னா, ஆள்காட்டி விரலையும், பெருவிரலையும், கொக்கின் மூக்குபோல் ஆக்கிக்கொண்டு, காசைக் கொத்தினார். பிறகு, எவரிடம் கொடுப்பது என்று தெரியாமல் அவர் புலம்பியபோது, சரோசா, அந்தக் காசை எடுத்து பிச்சை இட்டவரிடமே பிச்சைபோல் கொடுத்தாள்.

தாத்தாவும், பேத்தியும், கோவில் வளாகத்திற்கு உள்ளே வந்தார்கள்.அவரோ,தான்பிச்சை எடுக்கப்போகவில்லை என்பதைப் பிரகடனப்படுத்துவதற்காக “ஒன்னை பாக்கே” என்றார். அதைப் புரிந்து கொண்ட சரோசா, அவரது தலையை செல்லமாகக் குட்டிக்கொண்டே, அவரை இருந்த இடத்தில் உட்கார வைத்தாள். பெரியபொட்டலத்தைப் பிரித்து, கோழி பிரியாணியைக்கிளறி, ஒரு கவளத்தை அவர் வாய்க்குள் போட்டாள். இதற்குள் பல சொறி நாய்கள் அங்கே கூடிவிட்டன. இந்தப்போட்டியை தவிர்ப்பதற்காக, அந்த வளாகத்தின் உட்பக்கம் உள்ள ஒரு தேவாலயக் கட்டிடத்திற்குள் நாய்னாவை அழைத்துப் போனாள். சின்னக் கட்டிடம். உள்ளே, ஒரு கதவு.அதற்கு வெளியே சின்னசெவ்வக வழி. இதன் முடிவில் இரும்புக் கிராதிக்கதவு. சரோசா, கிராதிக் கம்பியின் வழியே உள்ளே கைபோட்டு, தாழ்ப்பாளை நீக்கி தாத்தாவை உள்ளே நகர்த்தியபோது ஒரு ஏவல் பையன், அவள் வரவுக்கு வாயால் தாளிட்டான் :

“எக்கோ, என்ன தப்பா நினைக்காதே. இனிமேகாட்டி இந்த இடத்திலே நீங்க குந்தினால் என்னோட வேல போயிடுமுன்னு பாதர் சொல்லிட்டார். நானு வேலையிலே இருக்கது, இல்லாதது உன்னோட பொறுப்பு.”

பெரிய மனிதன்போல் பேசிய அந்தப் பையனைத் துணுக்குற்றுப் பார்த்த சரோசா, நாய்னாவை கீழே இறக்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/182&oldid=636629" இலிருந்து மீள்விக்கப்பட்டது