பக்கம்:தாழம்பூ.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 17|

“இந்தத்தொழிலே இனிமேவேண்டான்னு நினைக்கேண்ணே. மாதச் சம்பளம் கிடைக்கிற ஏதாவது ஒரு வேலையிலே சேரலாம்னு.”

துரை, அவளிடம் பேசப் போனபோது, அவன் தர்மயத்தினி கொதித்தாள். கட்ட நண்டு போல் அவள் முகம் சுருங்கியது. இவளை - இந்த கிழிஞ்சபைஜாமா, கீறல் கையோடபார்க்கறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது.

‘இந்தா பாரும்மா, அவர எட்டன்னு நினைக்காதே. தண்ணிக்குள்ளேயே தடம் காணுறவரு அவரு”

“எவரும்மே?”

‘ஒனிக்கி, இன்னுந் தெரியலையா? அவருன்னா, அவருதான்; ஒன்னோட அண்ணாத்தே. இந்த பதினஞ்சி நாளா, இந்த சரோசா, எங்கே எங்கே போராள், யாரைப் பார்க்காள்னு அவருக்கு அத்துபடி..”

“அவருக்குத் தெரியுமுன்னு ஒனக்கு எப்படிம்மே தெரியும்?” தர்மபத்தினி, குறுஞ்சிரிப்போடு சிரித்தாள். துரைக்கு, சரோசா, யாரை எல்லாமோ பார்த்தாள் என்பதைவிட, அண்ணன், அந்த சமாச்சாரங்களை தன்னிடம் சொல்லாமல், தனது தர்மபத்தினியிடம் சொன்னதில், ஒரு இஸ்கு-தொஸ்கு இருப்பதை உணர்ந்தான். லேசாய் தெரிந்த சங்கதிதான். ஆனால், அப்படி இருக்காது என்று ஒரு அற்ப ஆசை, இதுவரை இருந்தது. இப்பப் பூட்டுது.

துரையின் உடம்பு படபடத்தது. ஏதோ ஒன்று தலைக்குள் துவாரம் போட்டு, கனமாகக் கீழிறங்கி, தொண்டைக்குள் சிக்கி நெஞ்சுக்குள் விழுவது போல் இருந்தது. ஏதோ இன்னொன்று பிடரிக்குள்ளே இருந்து பிராண்டுவது போல் இருந்தது. மனைவியையே வைத்த கண் வைத்தபடி பார்த்தான். அவள் உதடுகள் விரிய விரிய, இவன் உதடுகள் குவிந்தன. அவள் கண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/185&oldid=636632" இலிருந்து மீள்விக்கப்பட்டது