பக்கம்:தாழம்பூ.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தாழம்பூ

மலர மலர, இவன் கண்கள் கருங்கின. அந்த வீடே ஆதாரமற்று அவளோடு சேர்ந்து அதல பாதாளத்தில் விழுவது போன்ற அல்லாடல்.

இதைப்புரியாமல், சரோசா,வேண்டாவெறுப்பாய் நின்றாள். ஸ்பெஷல் சாராயம், பிடிச் சாம்பலாய் போனதால், அண்ணாத்தை கோபப்பட்டதாக தோஸ்துகள் சொன்னார்கள். ஆகையால் காச்சல், மீண்டும் பக்குவப்பட்ட அதாவது பழிபாவத்தைப் பற்றிக் கவலைப்படாத கரங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணாத்தையும் தனக்கு எதிராக தாம் தும் என்று குதித்த அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனரை மாற்றி விட்டதாகவும் கேள்வி. இந்தச் சமயத்தில் சரக்கு எடுக்கப் போய், அண்ணாத்தைக்கு, தன் மீது இருக்கக்கூடிய சந்தேகத்தைப் போக்க வேண்டும். வேறு வழியில்லை.

“சரி, குயிக்கா போயிட்டு குயிக்கா வாறேண்ணே.”

சரோசா, தர்மபத்தினியை நோட்டம் போட்டபடியே, வெளியே வந்தாள். பந்தலுக்குள் கோவிந்து, இடுப்பில் வெறும் டவுசரோடும், கையில் கிளாசோடும் கிடந்தான். அவன் காலில் சாய்ந்து கிடந்த தூக்குப் பையை எடுத்துக் கொண்டு சரோசா புறப்பட்டாள்.

குறுக்கு வழியாக நடந்து, சரோசா பூக்கார ருக்குமணியின் குடிசைக்குள் வந்தாள். ஒட்டைக் கதவுதான், கரடு, முரடு தரைதான், தில்லு முல்லு கூரைதான், ஒழுகல் காவாதான். ஆனாலும், அந்தக் குடிசையில் ஒரு கத்தம், ஒரு பூவாடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/186&oldid=636633" இலிருந்து மீள்விக்கப்பட்டது