பக்கம்:தாழம்பூ.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 173

சரோசா நீட்டியது.ாக்குப்பையை அதன் தாத்பரியத்துடன் வாங்கிக் கொண்ட ருக்குமணி கொதித்தாள் :

“நீயே அதுக்கு விஷச்சாராயம் குடிச்சுக் குடுமே, பாவி, கஸ்மாலம், அழிஞ்சு போவான்.”

“சரி எனக்கு நேரமாயிட்டது, சரக்கு எடுக்கப் போறேன்.” “இளங்கோ சொல்லச்சொன்னாருமே.சர்க்கார்வேலையிலே சேர்ந்தா ஒனிக்கும் நல்லதாம், ஒன் நயினாவுக்கும் நல்லதாம்.”

சரோசா, ருக்குமணியிடம் நடந்தவற்றை விவரமாக எடுத்துரைக்கப் போனபோது ஒருவன் ஓடிவந்தான். கோவிந்து என்று திட்டப்போன ருக்குமணி. முனுசாமியைப் பார்த்துவிட்டு கேள்விக்குறியுடன் நின்றாள். அவன் பாதி கிறக்கத்தோடு சொன்னான்:

“சரோசா! நீ வரப்போ நான் குடிக்கப்போனேனா. துரை சம்சாரம் டெலிபோன்லே, உன் பேரைச் சொல்றத கேட்டுட்டு ஒட்டுக் கேட்டேன். யார்கிட்டேயோ அவள் பேசிட்டு, அப்பாலே துரைகிட்டே ஒப்பிச்சாள். எவனோ அண்ணாத்தையோ, கிண்ணாத்தையோ, நீ வேலையில சேர்ந்தா ஆபத்துன்னு சொன்னாராம். அதனால நீ இன்னிக்கி சரக்கு எடுத்து வறப்போ ஒன்னை போலீஸ் மடக்குமாம். ஏற்பாடு செய்திட்டாராம். அவள், துரைகிட்டே சொன்னதும், அவன், அவள, போட்டுப் போட்டு உதைச்சான். வேடிக்கை பார்க்க நினைச்ச மனசை அடக்கிட்டு, உன்னே பாலோ பண்ணி வந்திட்டேன். ஏன்னா, நீ என்னோட தோஸ்து இளங்கோவுக்கு தோஸ்தாச்சே. சொம்மா இருக்க முடியுமா?”

முயல்போலப் பாயப்போன சரோசா, ஆமை போல் நின்றாள். எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கி ஏதோ ஒரு வாகனத்தின் சக்கரம் தலையில் ஏறியது போன்ற தடுமாற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/187&oldid=636634" இலிருந்து மீள்விக்கப்பட்டது