பக்கம்:தாழம்பூ.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தாழம்பூ

அது தலைக்குள்ளே சுழலுவது போன்ற அதிர்வு. அந்தத் தலையும், கழுத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு பம்பரமாய் சுற்றுவது போன்ற அவள் உணர்வுச் சுற்றல். அரைக்கண் பார்வையோடு, அப்படியே நின்றாள். முனுசாமி அவளைப் பரிதாபமாகப் பார்த்தபடியே, அதே சமயம் ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டிய பெருமிதத்தில் தண்ணிப்பட்டயாடாய் நடையைக் கட்டினான்.

அம்மாவின் ஆணைப்படி பலசரக்குக் கடையிலிருந்து, கால் கிலோ தக்காளியை மறைக்கும்படி கருவேப்பிலை ‘கொகரை’ கவரில் போட்டுக் கொண்டு வந்த ஆறுமுகப்பயலை, ருக்குமணி, அவன் முதுகைப் பிடித்து வளைத்து, காரணமில்லாமலேயே இரண்டு போடு போட்டாள். சரோசாவின் முன்னால் வந்து அவள் முகத்தையே பார்த்தாள். அவள் தோளைப் பிடித்து உலுக்கினாள். அப்படியும் சரோசாவின் கண்கள் அங்குமிங்கும் சுழலாமல் நின்ற இடத்திலேயே நிலைத்திருப்பதைப் பார்த்து, அவள் தலையைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டே கேட்டாள்:

“ஒன்ன, கடாவ வளக்கது மாதிரிதான் வளர்த்துருக்காங்கமே. ஒனிக்கி நாய்க்கி தீனி போடறதுமாதிரிதான் போட்டுருக்காங்கமே. நாய்க்கி வெறி வந்தா அத வளர்க்கிறவன் மருந்துபோட்டு காப்பாத்தறான். ஆனாங்காட்டி,கையாளுக்குப்புத்தி வந்தா, அதோட எசமான்கொலை கூட செய்வான். இப்பவாவது ஒனக்கு புரியுதாமே? ஏம்மே பேச மாட்டேங்குற?

பூக்கார ருக்குமணி சொல்லச் சொல்ல, சரோசா அகலமாய் கிடந்த கண்களை ஆழப்படுத்தி, அப்படியே நின்றாள். ருக்குமணி, தக்காளிகளை எடுத்து தன்மீது எறிந்து கொண்டிருந்த மகனைப் பற்றி பிரக்ஞை இல்லாமலே, சரோசாவின் பிரச்சினைக்கு விடை கண்டவள் போல் அவள் தோளில் கை போட்டபடி, உபதேசித்தாள்.

‘விட்டுத்தள்ளு கஸ்மாலத்த. இதுவும் நல்லதுக்குத்தான். ஒன்கிட்டே விசாரிக்காமலே குழி பறித்தான் பாரு கஸ்மாலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/188&oldid=636635" இலிருந்து மீள்விக்கப்பட்டது