பக்கம்:தாழம்பூ.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தாழம்பூ

“நீ நினைக்கது மாதிரி இளங்கோ சொல்ற வேலையில சேர்ந்திட்டா, அண்ணாத்தே என்ன விட்டுவைக்க மாட்டாரு ருக்கு”

‘இப்ப மட்டும் விட்டுவைக்கானா? அதென்ன கூத்து? எவனோ பொறுக்கிக்கி நீ ஏன் பயப்படறே? கண்றாவியா இருக்கு”

சரோசா, நார்க்கட்டிலில் சாய்ந்து சுவரில் தலையை போட்டுக் கொண்டு, அந்தத் தலையை அங்குமிங்குமாய் புரட்டிக் கொண்டு, ருக்குமணிக்குக் கதை சொல்வது போல் சொன்னாள்:

‘அண்ணாத்தைய பத்தி சரியா தெரிஞ்சா இப்படிப் பேசமாட்டேருக்கு. அவரோட அஞ்சு வருஷமா இருக்கிற பழக்கத்த அறுத்துக்கினு போறது என்னையே நான் அறுத்துக்கிறதுமாதிரி. போன மாசம் துரையண்ணே வீட்டுல எங்க கோஷ்டியில ஒருத்தன் தண்ணியில மிதந்தான்.அப்போ பார்த்து அண்ணாத்த வந்தாரு அவருகிட்டயே நாளைக்கி கோர்ட்டுல ஒன் பேரையும் சொல்லப்போறேன் அண்ணாத்தேன்னு சொம்மா தமாஷக்குச் சொன்னான். அண்ணாத்தையும் சிரிச்சாரு அண்ணாத்தே ஆள் வச்சி ஒருத்தர வெட்டின கோஷ்டியில அவனும் ஒருத்தன். மறுநாளு பார்த்தா. அந்த தோஸ்து கடலுல மிதக்கான். பொணமா மிதந்தான். அண்ணாத்தே எதுவும் தெரியாதது போல அந்தப் பொணத்த ஜோரா அடக்கம் பண்ணினாரு ‘பாவம் நல்லவன்னு வேற துக்கமாச் சொன்னாரு அப்பேர்ப்பட்டவரு அண்ணாத்தே.”

ருக்குமணியே பயந்துவிட்டாள். சரோசாவின் ‘அண்ணாத்தே எங்கும் வியாபித்திருப்பது போல் ஒரு பிரமை. அந்தக் குடிசைக் குள்ளும், அவர் வந்து நிற்பது போல் ஒரு அனுமானம். சரோசாவிற்கு சப்போர்ட்செய்ததற்காக தன்னையும் பட்டாக்கத்தியோடு குறிபார்ப்பது போன்ற ஒரு அச்சம். சிறிது நேரம் தடுமாறினாள். பிறகு குடிகாரக் கோவிந்துடன் குடித்தனம் செய்வதை விட, அப்படி வெட்டுப்பட்டாவது சாகலாம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/190&oldid=636638" இலிருந்து மீள்விக்கப்பட்டது