பக்கம்:தாழம்பூ.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 77

தெளிந்தாள். எல்லாவற்றையும்விட, இயல்பான மனிதாபிமான வேகம். அண்ணாத்தையை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு அசட்டுத் துணிச்சல். இப்போது, தானே சரோசா என்பது மாதிரி ருக்குமணி பேசினாள் :

“வல்லவனுக்கு வல்லவன், வையகத்துல உண்டுமே. ஒன் அண்ணாத்தே சாராயக் கொம்பன்னா, பாமாவோட அப்பா ரமணன் போலீஸ் கொம்பன். நீ வேலைக்குப் போகாமலேயே அண்ணாத்தே கூட இருந்தாலும், அவன் ஒன்ன ஏதாவது செய்யத்தான் போறான். இளங்கோவோட கவர்ன்மெண்ட் வேலையில சேர்ந்திட்டா, ஒணிக்கி அதுவே ஒரு பாதுகாப்பு. நம்ம கார்ப்பரேஷன் எச்சில் லாரி ஆளுங்க கூட ரோட்ல வண்டிய குறுக்கா வெச்சிட்டு பெரிய பெரிய கார்ல வர்றவங்களக் கூட எப்படி முறைக்காங்க! இதுக்கப் பேருதான் சர்க்கார் வேல. ஒண்ணாத்த பருப்பு ஒண்ணும் வேகாது.”

‘நீ நெனக்கிது மாதிரி எனக்குக் கொஞ்சம் பாதுகாப்புத்தான். ஆனால் அந்தப் படுபாவி இதுக்குக் காரணம் இளங்கோன்னு, பாவம் அந்த மனுஷன எதுவும் செய்திடப்பிடாதே. நானு பாவி, அவர ஆளுவெச்சி அடிச்ச காயமே இன்னும் முழுசா ஆறலே; அதுக்குள்ளே அண்ணாத்தே.”

‘அண்ணாத்தே... எவன்மே ஒனக்கு அண்ணாத்தே? தென்னமரம் காத்துல ஆடுறப்போ, அதுல இருக்கிற ஓணான், மரத்த தான்தான் ஆட்டுறதா நினைச்சி தலைய ஆட்டுமாம். அப்படிப்பட்ட ஓணான் பய உங்கண்ணாத்த அவன், எங்க இளங்கோவ ஒண்னும் ஆட்ட முடியாது. அவருக்குப் பக்கபலமாக அந்த கஸ்மாலம் சார் ரமணன் இருக்காரு. அவருக்கு அல்லா போலீகமே சல்யூட் அடிக்காங்கோ. பாமாவோட அங்கிளோ, கிங்கிளோ பெரிய போலீஸ்காரரு. ஒணிக்கு வேண்டாமுன்னா சொல்லு, நானு சேர்ந்திடறேன். பூக் கட்டிக் கட்டி கைதான் கட்டியாப் பூட்டு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/191&oldid=636639" இலிருந்து மீள்விக்கப்பட்டது