பக்கம்:தாழம்பூ.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s?8 தாழம்பூ

“ஒனக்கென்ன சொல்லிட்டே கட்டிக்கிட்டுப் போக நல்ல புடவசுடட இல்ல. எனிக்கி இருந்த ஒரு புடவையும் இப்போ நாயினாவுக்கு பெட்ஷீட்டா ஆயிட்டு சீவிச்சிங்காரிக்க ஒரு சீப்பு கூட இல்ல.”

“கவலைய வுடுமே. சீவுறதுக்கு ஒனக்கு முடியிருக்கு. சிங்காரிக்க முகமிருக்கு. நானு என்னோட புடவயத் தாறேன். இரண்டு மொயம் பூவும் தாறேன். நாளிக்கி வந்து இங்க டிரெஸ் பண்ணிக்கிட்டுப்போ. நானும் பால்ராஜ் பேன்சி கடையில ஒரு கில்ட்டு செயினு - பத்துருவா தானாம் - வாங்கி வச்சிட்றேன். நல்ல காரியத்த தள்ளப்புடாதுமே”

சரோசா, என்ன நினைத்தாளோ, ருக்குமணியின் தோளில் சாய்ந்து குலுங்கினாள். காலாட, கால் விரல்கள் தனித்தனியாய் ஆட, முதுகு மேலும் கீழுமாய் நகர, குலுங்கிக் குலுங்கி அழுதாள். பிறகு அவள் கையிரண்டையும் தனது தோளில் போட்டுக் கொண்டு, ருக்கும்.ணியின் முகத்தில் மாறிமாறி முத்தமிட்டபடியே “எங்கம்மாவ பார்த்துட்டேன் எங்கம்மாவப் பார்த்துட்டேன்” என்று தன்பாட்டுக்குப் புலம்பினாள். ருக்குமணி, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். குழந்தையை தாலாட்டுவது போல் அவளை மார்போடு சேர்த்து ஆட்டினாள். அவள் முகத்தைத் துடைத்து தனது கைகளை ஈரமாக்கிக் கொண்டாள். இந்த இடைவேளையில் சரோசா கதாரித்துக் கொண்டாள். ருக்குமணியின் தோளை ஆதரவாகப் பிடித்தபடியே கம்பீரமாக எழுந்தாள். கூடவே எழுந்த ருக்குமணி சிறிது பதட்டத்தோடு வினவினாள் :

“சரக்கு எடுக்கவா போறே?”

“இனிமே எடுக்கப் போனா, என்ன நானே ஜோட்டால் அடிக்க முகத்தக் கொடுத்ததா அர்த்தம்.”

“எனிக்கி ஒரு யோசனை தோணுது. பேசாம இன்னிக்கி நைட்டுல என் வீட்டுலேயே படுத்துக்கோ. நீ படுத்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/192&oldid=636640" இலிருந்து மீள்விக்கப்பட்டது