பக்கம்:தாழம்பூ.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 179

படுக்காட்டியும் கோவிந்த வெளியில போட்டுத்தான் கதவ சாத்துவேன். இன்னா சொல்றே?”

“கவலைப்படாதே ருக்கு! எனிக்கி சமாளிக்கத் தெரியும். காத்தால வர்றேன்.”

“கண்டிப்பா வாறே. இல்லாட்டி நீ ஆரோ. நான் ஆரோ.”

“அபசகுனமாப் பேசாதே. நானு ஒரு சொல்லுல நிக்கற பொம்மனாட்டி” -

சரோசா, போக மனமின்றி, போவது போல் போனாள். இப்போது குறுக்கு வழியில் நடக்காமல் பஸ்கள் போகும் சாலை வழியாக நடந்தாள். தனிமையில் நடக்க நடக்க, அவளுக்கு கால்கள் துண்டித்து தரையில் விழுவது போல் இருந்தது. மலைபோல நம்புன அண்ணாத்தே இப்படிச் செய்திட்டாரே. நேர்ல கூப்பிட்டு கன்னத்துலகூட இரண்டு போட்டு புத்திமதி சொல்லியிருக்கலாம். போலீஸ்ல அநியாயமாய் மாட்ட வைக்கிறதுக்குத் திட்டம் போட்டுருக்காரே. இன்னா மனுஷன்? அண்ணாத்தே காலுல போய் விழலாமா, வேணாமா? இவரு இன்னா அண்ணாத்தே? நானு நினைக்கிற மாதிரி அவரு நினைச்சிருந்தா இப்படிச் செய்வாரா? அண்ணாத்தே என்கிறது - நாய், நரி, பண்ணி என்கிறது மாதிரி ஒரு பேரு.

சரோசா, வேகவேகமாய் நடந்தாள். அவன் வாழும் இடத்திற்கே சென்று அங்கு இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்ற வேகம். அந்தச் சமயம் பார்த்து ‘அண்ணன் காட்டிய வழியம்மா என்ற பாட்டு, அவள் அழுது விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/193&oldid=636641" இலிருந்து மீள்விக்கப்பட்டது