பக்கம்:தாழம்பூ.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 183

காலையிலேயே பூக்காரத் தோழியின் வீட்டுக்குப் போனவள், “அந்த கஸ்மாலம் மாருவாடிக்கிட்ட வைக்கிறதுக்கு முன்னாடி நீ கட்டிக்கோ” என்று சொல்லி ருக்குமணி கொடுத்த புடவையையும், அதற்கேற்ற ஜாக்கெட்டையும் வாங்கிக்கொண்டாள். இதர இரண்டு, மூன்று சேலைகள் கொடியில் தொங்கியபோது, இந்தப் புடவை மட்டும் கரப்பான் பூச்சிவில்லைகள் போடப்பட்ட டிரங்க்பெட்டியிலி ருந்து வெளிப்பட்டது. எலுமிச்சை நிறம். பைஜாமாவை லேசாகச் சுருட்டி, அதையே பாவாடையாக அனுமானித்துக் கொண்டு, அதற்குமேல் புடவையைக் கட்டலாமா என்று சரோஜா சிறிது யோசித்தாள். பிறகு புடவையை கற்றிக் கொண்டு பைஜாமாவைச் சுருட்டி ஒரு மூலையில் போட்டாள். ருக்குமணி அவள் நெற்றியில் பிளாஸ்டர் குங்குமத்தை ஒட்டினாள். சினிமாக்காரி மாதிரி ஜொலி த்த கில்டு செயினை பூட்டிவிட்டாள். இந்த அன்பைப் பொறுக்க முடியாமல், சரோசா கண்ணிர் விட்டபோது “பவுடர் நனைஞ்சு திட்டுத்திட்டா ஆயிட்டுப்பாரு. பவுடர் கொஞ்சமாத்தான்கீது. அதனால இதுக்குமேல் அழாதே” என்றாள் ருக்கு."ஏம்மே கலங்குறே? நானிருக்கேன், இளங்கோ இருக்கார் ஒன் அண்ணாத்தே இன்னாப் பண்ணுறான் பார்க்கலாம். கண்ணாடி முன்னால போமே. எப்படி ஜொராக்கிறே தெரியுமா?” என்று ஆற்றுப் படுத்தினாள்.

சரோசாவை, ருக்குமணி பஸ் நிலையம்வரை வந்து வழியனுப்பி வைத்தாள். அந்தப் பல்லவன், இளங்கோ குறிப்பிட்ட அலுவலகத்திற்கு முன்னால் பஸ் நிலையத்தில் இருந்து அனைவரையும் ஒட்டப்பந்தயத்தில் பார்க்க விரும்பியது போல், இருபதடி தள்ளி நின்றது. சரோசா இறங்கினாள்.

அந்த இலுவலக முகப்பில் இரண்டு பிரிவுகளான இரும்பு கேட்டுகளில் ஒன்று மூடியிருந்தது. இன்னொன்று அரைக்கண் பார்வை போட்டது. அந்த ஒருகண் வழியாக உள்ளே போனாள். அங்குமிங்குமாய் பார்த்தாள். வலதுபக்கம் ஒரு தூக்கலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/197&oldid=636645" இலிருந்து மீள்விக்கப்பட்டது