பக்கம்:தாழம்பூ.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தாழம்பூ

மெட்டு மாதிரி அடித்தொண்டைக் குரலு.'படா காலு, படா கையி’ ஒரு நாட்டுப்புறம், இந்த வீட்டுப் புறத்துக்கு வந்திருக்கு.

சரோசா, தனது அனுபவங்களை ஒட்டுமொத்தமாக உள்ளத்திற்குள் கொண்டு வந்தாள். முதலில், திருடிய இடத்தைவிட்டு எகிறனும். அப்பால அக்கம்பக்கத்து கஸ்மாலங்க’ கூடும் முன்னால, கைகால விரிச்சுப்போட்டு ஓடாதது மாதிரியும், நடக்காதது மாதிரியும் போகணும். அதே சமயம், அந்த கெய்விக்கு பயப்படாதது மாதிரியும் தில்லாப் பார்க்கணும். ஆனாலும், அதுக்கு மரியாதி கொடுக்கிறது மாதிரி தலைய ஒரங்கட்டிலேசாச் சிரிச்சு நழுவனும்,

சரோசா, பழைய அனுபவங்களை செயல்படுத்தும் வகையில், அவளை தில்லாய் பார்த்து, கம்மாங்காட்டியும் சிரித்து, நடந்த போது, எதிர்வீட்டு அம்மா, அவளுக்குப் புதிய அனுபவத்தைக் கற்றுக்கொடுக்கப்போகிறவள் போல் சாலையில்’ வந்து நின்றவளை இரண்டு கையையும் குறுக்காய் நீட்டி வழிமறித்து, வாயைப் பேசவிட்டாள்.

“ஏண்டி திருட்டு முண்ட இந்த உடம்பை வைச்சுக்கிட்டு, இப்படி ஏண்டி பொழப்பு நடத்தறே? ஏண்டி ஆள் இல்லாத வீட்டுக்குள்ள போய் அடாவடியா இரும்புக் கம்பிய பிடுங்கற? இன்னும் என்னல்லாம் திருடினியோ? கோணிப் பைய திறந்து காட்டுடி. ஒன்ன மாதிரி திருடிங்கள, நடுரோட்டுல நிக்க வைச்சுச் கடனும்.”

எதிர்வீட்டம்மா, பேச்சோடு நிற்கவில்லை. ஐம்பது வயதிலும் அந்த இருபது வயதுக்காரியை வீழ்த்த முடியும் என்ற உறுதியோடு, சரோசாவின் கோணிப்பையை பறிப்பதற்காக கையை நீட்டினாள். உடனே சரோசா கோணி மூட்டையை உடம்புக்கு முன்னாலும் பின்னாலும், தலைக்கு மேலும் கீழும் அங்குமிங்குமாய் ஆட்ட, எதிர்வீட்டம்மா, அது சுற்றிய கற்றுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/20&oldid=636648" இலிருந்து மீள்விக்கப்பட்டது