பக்கம்:தாழம்பூ.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}88 தாழம்பூ

நாற்காலிக்கு அடுத்த நாற்காலியை விட்டுவிட்டு அமர்ந்தான். அங்கே போய்க் கொண்டிருந்த பெரிய மனிதர்களை அவர்களை தனக்குத் தெரியும் என்கிற முறையில் ஏதேதோ கேட்டான். அவர்களில் சிலர், அவனுக்கு நின்று பதிலளித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு சரோசாவை நோட்டமிட்டான். தற்செயலாய் கேட்பதுபோல் கேட்டான் :

“ஒங்க பேரு என்ன?” “சரோசா.” - “பேருக்கு ஏத்தாப்புலதான் இருக்கீங்க. என்ன விசயம்?”

“எனிக்கி தெரிஞ்சவரு, இளங்கோன்னு பேரு. ஒரு வேல போட்டுத் தரதா சொன்னார்”

“அவரு என்ன அவரு, நானே கூட உனக்கு வேல போட்டுத் தர ஏற்பாடு செய்யறேன். டோண்ட ஒர்ரி. இந்தப் புடவ நல்லாயிருக்கே. அப்புறம் ஒன்னோட குடும்ப பேக்ரவுண்ட சொல்லு பார்க்கலாம்.”

மீசைக்காரன், தான் உட்கார்ந்திருந்த நாற்காலி சரியில்லை என்பதுபோல் எழுந்து, அவளுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான். அவனிடம் தன்னைப் பற்றிய சில விவரங்களை மட்டும் சொல்ல நினைத்த சரோசா, அவன் பார்த்த பார்வையும், பேசிய பேச்கம் பிடிக்காதவள் போல் முகம் கழித்தாள். அவனது வலது கை, அவளது நாற்காலிக்குப் பின்னால் தாளம் போட்டது. அந்த பிளாஸ்டிக் நாற்காலியை தட்டியபடியே அவளைத் தட்டுவது போல் அனுமானித்தக்கொண்டான். சரோசா அதிர்ந்து போனாள். எத்தனைவாட்டி ஒண்ணாப் படுத்தாலும் பேஜாரு செய்யாத குப்பத்து தோஸ்துகளை நினைத்தபடியே சட்டென்று எழுந்தாள். அவனோ, இன்னும் “டோன்ட் ஒர்ரி, டோண்ட் ஒர்ரி” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/202&oldid=636651" இலிருந்து மீள்விக்கப்பட்டது