பக்கம்:தாழம்பூ.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 189:

சரோசா, அந்த வரவேற்பு நாற்காலிக்கு முன்னால் வந்து நின்றாள். அந்த நாற்காலிக்காரி டெலிபோனைக் குடைந்து ஒவ்வொருவரிடமும் ஏதோ பேசினாள். பிறகு அங்கேயிருந்த ஒருசிலரை உள்ளே போகச் சொன்னாள். பிறகு கேண்டினில் இட்லி இருக்கிறதா என்று விசாரித்தாள். தளபதிக்கு டிக்கெட் வேண்டும் என்றாள். அதேசமயம் அங்கேயிருந்த ரிஜிஸ்டரில் எழுதிக் கொண்டிருந்த ஆண்களையும், பெண்களையும் சைடில் பார்த்தாள். இந்தச் சமயத்தில் குதிரை மூக்கு மாதிரி முகத்தைத் திணித்த சரோசாவைப் பார்த்துக் கோபமாகக் கேட்டாள் :

“என்ன வேணும்?”

“இளங்கோ சார்”

“இளங்கோ சார்ன்னு யாருக்கும் பேரு கிடையாது. எஸ். இளங்கோ, ஜி. இளங்கோ, எல். இளங்கோவன், இதுல யாரு வேணும்?”

“நானு அடிச்சுப் போட்டேனே?”

“என்ன ஒளறுறே?”

‘இளங்கோ, அதுதான், அறியாத புள்ளாண்டான். பதினைந்து நாளா ஆகபத்திரியில பேஜாரு பட்டவரு. எனிக்கி வேல போட்டுத் தாரேன்னார்.”

“நீயும் ஒன் தமிழும். கேஷவலா? உட்காரு.”

“அது வந்திருக்குதா?”

“எனக்கு ஜோசியமா தெரியும்? உட்காருன்னா உட்காரு. இல்லாட்டி நடையக்கட்டு.”

வரவேற்புக்காரி வாட்டசாட்டமானவள். அங்கே வருகிறவர்களை குசலம் விசாரித்து, அவர்களது உறவையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/203&oldid=636652" இலிருந்து மீள்விக்கப்பட்டது