பக்கம்:தாழம்பூ.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தாழம்பூ

முதலீடாக்கி நான்கைந்து டாக்சிகளை விட்டிருப்பதாகக் கேள்வி. இவள் தேறாதவள் என்பதால் அலட்சியமாக அடிக்கடி டெலிபோனில் பேசிப்பேசி அங்கேயிருந்தவர்களை ஏலத்தில் கூப்பிடுவதுபோல் கூப்பிட்டாள். சரோசா என்ற வார்த்தை வாயில் வரவில்லை. இதற்குள், சரோசா படியமாட்டாள் என்பதைப் புரிந்துகொண்ட மீசைக்காரன், வரவேற்புக்காரியின் காதில் உதடுகள் படும்படி கிசுகிசுத்தான். ஒருமணி நேரத்திற்கும்மேல், சரோசாவுக்கு, காலம் காலன் போல் கடந்தது.

சரோசா மீண்டும் அங்கே போனாள். ‘தத்தேறி முண்ட, அது வந்திருக்கா, வரலியான்னாவது சொல்லாமே... கீறாள். இவள்லாம் அண்ணாத்தேகிட்ட சிக்கனும், அப்போ தெரியும் சேதி:

இவளின் துடிப்போ, அல்லது பதைப்போ புரியாத அந்தக் குமரிக்கிழவி கத்தினாள் :

“இந்தா பாரு. என் மூட அவுட்டாக்காதே. எனக்கு ஒன்னய எப்போ கூப்பிடணுமுன்னு தெரியும். அப்புறம், யோவ் மீசை, இன்னிக்கி அந்த பார்ட்டி இருக்குதா?”

சரோசா, ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கி அந்த நாற்காலியில் மீண்டும் உட்கார்ந்தாள். ஒருமணி நேரம், ஒன்றரை, இரண்டு. மீண்டும் அவள் அங்கே போனபோது வரவேற்புக்காரி டம்பப் பையோடும், மீசைக்காரனோடும் வெளியேறினாள். இப்போது ஒரு ஆம்பளை கிழடு உட்கார்ந்தது. சரோசா அவர் முன்னால் ஒடிப்போய் நின்றாள். “இளங்கோ சாரு.. இளங்கோ சாரு...” என்றாள். அவர் கத்தினார் : “வந்ததும், வராததுமாய் என்னம்மா இது? என்றார். சரோசா கலங்கிபோனாள். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாப் போச்சே.!

- சரோசா வந்த வேளை என்ன வேளையோ? அலுவலக

இடைவேளை வந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/204&oldid=636653" இலிருந்து மீள்விக்கப்பட்டது