பக்கம்:தாழம்பூ.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 19)

அந்த வரவேற்புக் கிழடு, ஆற அமர உட்காரட்டும் என்பதுபோல் அவள் பல்லைக் கடித்துக் கொண்டே நின்றாள். அதுவோ கையோடு கொண்டுவந்த டியன் பாக்ஸை மேஜையில் போட்டுத் திறந்தது. எலுமிச்சப்பழ சாதம், எண்ணெய்கத்திரிக்காய், அந்த வரவேற்பு வட்ட மேஜையிலேயே கரங்களை கால்கள் மாதிரி நீட்டிக்கொண்டது. கிடைக்காத தீனி கிடைத்துவிட்டால், ஒரு நாய், இரண்டு கால்களையும் முன்னால் நீட்டிக்கொண்டு அதற்கு மத்தியில் உள்ள இரையை தலையை சாய்த்துச் சாய்த்துத் தின்னுமே அப்படி.

இந்தச்சமயம் பார்த்துமீசைக்காரன் அங்குவந்தான். கிழடுக்கு தண்ணிர் பிடித்துவைத்துவிட்டு, அவளை நோட்டமிட்டான், இப்பவாவது என் அருமை புரிஞ்சுதா என்பதுமாதிரி. இதற்குள் மீசைக்காரன் அந்தக் கிழட்டைப் பார்த்து “வி.ஐ.பி. ரூம்ல போய் சாப்பிட்டுட்டு வழக்கம்போலத் துங்குங்க சார்; ரிசப்ஷனை நான் பார்த்துக்கிறேன்” என்றான். கிழடு அவனை விருப்போடும், சரோசாவை வெறுப்போடும்பார்த்துக்கொண்டது.பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு வி.ஐ.பி. ரூமிற்குள் படுக்கப் போய்விட்டது. மீசைக்காரன் அவரது நாற்காலியில் ஏறிக்கொண்டான். சரோசாவைப் போலவே ஒருசில தலை காய்ந்த பெண்களும், ஆண்களும் மீசைக்காரனை மதுரை வீரனாகப் பார்த்துக் கொண்டு அவன் பக்கமாகப் போனார்கள்.சரோசா மட்டும்வீறாப்பாகநின்றாள். மீசைக்காரன் மற்றவர்களை மிரட்டினான். “போங்க.. போங்க. அந்தப் பக்கமாகப் போங்க... டைரக்டர் வர்ற நேரம், நான் கூப்பிடுவேன், எனக்கு எப்பக் கூப்பிடணுமுன்னு தெரியும்.”

சரோசா, ஒன்றைப் புரிந்து கொண்டாள். இவனுக்கு விட்டுக்கொடுக்க வில்லையானால், உள்ளே விடமாட்டான். அடக்கண்றாவியே, சர்க்கார் ஆபீகலயா இந்தக் கூத்து. சாராயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/205&oldid=636654" இலிருந்து மீள்விக்கப்பட்டது