பக்கம்:தாழம்பூ.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தாழம்பூ

கடையில இல்லாத கூத்து. பேமானிப் பயலுக. பேசாமப்பூடலாம். நாளிக்கி இளங்கோவோடயே வரலாம். அய்யய்யோ! அதுக்குள்ளே வேல ஆருக்கும் பூட்டா? போனாப் போகட்டும். வெளியிலயே இப்படின்னா உள்ள எப்படியோ? சாட்சிக்காரனைவிட சண்டைக்காரனே தேவல. பேசாம, அண்ணாத்தக்கிட்டயே சரண்டராயிடலாம். சின்னவீடுதான் கோள் மூட்டியிருப்பாள். காலுல விழுந்தா துக்கிவிடுவாரு

சரோசா, வாசலுக்கு வெளியே போவதும், உள்ளே வருவருமாக இருந்தாள். அந்தச் சமயத்தில் உள்ளேயிருந்து வெளியே வந்த ஒருத்தியிடம் “இளங்கோ சார் இருக்காரா?” என்று கேட்டாள். அவள் பக்கத்தில் இருப்பதாலேயே, தான் பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்ட அந்தப் பெண் ஊழியை, அவளிடம் அலட்சியமாக ஏதோ சொல்லப்போனாள். இதற்குள் எவனோ ஒருவன் அவளோடு சோடி சேர்ந்துவிட்டான். சரோசாவுக்குப் பதிலளிக்காமலேயே அவளும் அவனோடு போய்விட்டாள். அந்தச் சமயம் பார்த்து உள்ளே வந்த, ஒரு வெத்தலைப் பாக்கு ஆசாமியிடம் கேட்டாலோ, அவர் மீசைக்காரனிடம் கை காட்டினார். பேசாம மீசை சோமாரியை தாடையில ஒண்ணு போடலாமா..?

சரோசாவின் உள்வாங்கிய கண்கள் திடீரென்று இமைகளைத் துாக்கியபடி வெளிப்பட்டன. ஒடுங்கிய உதடுகள் பிரிந்தன. கன்னத்தில் குவிந்த கைகள் நீண்டன. இளங்கோ சார். அதோ அந்த மீசைக்காரனுக்குப் பக்கத்திலேயே, நீலக்கலர் பேண்ட், அதுக்குள்ளே டக்கு வெச்ச சட்ட கம்மா சொல்லக்கூடாது, பிள்ளாண்டான் நல்லாத்தான் கீறாரு மீச மட்டும் வச்சாருன்னா குயந்த முகம் மாதிரி தோணாது.

சரோசா, துள்ளிக்குதித்து இளங்கோவின் முன்னால் போய் நின்றாள். மீசைக்காரனிடம் பேசிக்கொண்டிருந்த அவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/206&oldid=636655" இலிருந்து மீள்விக்கப்பட்டது