பக்கம்:தாழம்பூ.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194. தாழம்பூ

‘அடேயப்பா எம்மாம் பெரிய கவர்மெண்ட் ரிஜிஸ்டருல நானு கையெழுத்துப்போடறேன்; நைட்டு போய் நாயினாகிட்ட சொல்லணும்.’

இளங்கோ முன் நடக்க, சரோசா பின் நடந்தாள். வரவேற்பு வளையத்தைத் தாண்டி, பத்தடி இடைவெளி போன்ற பாதையில் நடந்து, எதிரேயுள்ள இரண்டு கண்ணாடிக் கதவுகளில் இளங்கோ ஒன்றைத் தள்ளினான். முரண்டுபிடித்த அந்தக் கதவு சரோசா மீது மோதாமல் இருப்பதற்காக அதைப் பிடித்துக் கொண்டான். சரோசா ஜம்மென்று நடந்தாள். வாசல் வளாகத்திலும், வரவேற்பு அறையிலும் அனுபவித்த சிறுமை, இப்போது சிறுத்துவிட்டது. மீசைக்காரனைப் பற்றி இளங்கோவிடம் சொல்லப் போனாள். பிறகு, வாயை மூடிக்கொண்டாள். எந்தக் காரணத்தைக் கொண்டும், துரை அண்ணன் சம்சாரம் அண்ணாத்தைக்கிட்ட சொன்னாப்பல, கோள் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்றது, ‘நீ இருந்தும் நடக்குது பாரு’ என்கிற அர்த்தமா ஆயிடும்.

இருவரும், கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி மெயின்ரோட அளவுக்கான அகலமான பாதையில் நடந்தார்கள். இருபுறமும் பெரிய பெரிய அறைகள், ஒவ்வொரு அறையிலும் மத்தியிலோ அல்லது ஒரு ஓரத்திலோ ஒரு கிருதாமீசை, வஸ்தாது நாற்காலி. மற்ற மேஜை நாற்காலி வகையறாக்கள் மற்றும் பலர் மாதிரி. அத்தனை அறைகளிலும் ஆண்களும், பெண்களுமாய் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே சந்தைச் சத்தம். டெலிபோன் முணுமுணுப்பு, வானொலியின் கிரிக்கெட் வர்ணனை."டப்பு டப்பு டைப்ரைட்டரின் சத்தம், ‘டொக்கு டொக்கு மின்விசிறிச் சத்தம். சரோசாவுக்கு ஒரு சின்ன ஆசை. அதோ சொரசொரப்பான கம்பளத்துமேலே கீற நாற்காலி நல்லாத்தான் கீது நாயினாவ ஒரு நாளக்கிக் கூட்டிவந்து அதோ அந்த மெத்த நாற்காலியில குந்தவைக்கணும். நாயினா.நாயினா.பாரு நாயினா, ஒன்பேத்தி மனுஷியாயிட்டா..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/208&oldid=636657" இலிருந்து மீள்விக்கப்பட்டது