பக்கம்:தாழம்பூ.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 195

இளங்கோ இடதுபக்கமாக இருந்த ஒரு அறைக்குள நுழைந்தான். இரண்டு கூறுகளான கதவுகள் திறந்தபடியே இருந்தன. உள்ளே நுழைந்தவன், வெளியே லேசாய் தயங்கி நின்றவளை லேசாய் தலையாட்டிக் கூப்பிட்டான். அவள் மெல்ல நடந்து உள்ளே வந்தாள். அந்த அறையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாள். நீளவாக்கிலான செவ்வக அறை. அறுபதுக்கு முப்பது. கிழக்குப் பக்கம் ஒரமாக பிளைவுட் தடுப்புகளைக் கொண்ட ஒரு சின்ன அறை. இருபதுக்கு இருபது. அந்த அறையை மூடிய கதவு. வெளியே வடக்குப் பக்கம் நடுவில் பெரிய மேஜை, அதில் கழுத்தை சாய்த்துக்கொள்ளும் அளவிற்கான நாற்காலி. அந்த இருக்கைக்கு முன்னால் இருபுறமும் ஐந்தாறு இரும்பு நாற்காலிகள். சன்மைக்கா மேஜைகள். தெற்கு முனையில் ஒரு பாடாவதி மேஜை, அதன் மேல் பைல்கள், மைக்கூடுகள், ரப்பர் ஸ்டாம்புகள். ஒரு வீராப்பான பேர்வழி,

நடு நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர் சரோசாவை ஓரங்கட்டிப் பார்த்தபடியே, இளங்கோவைப் பார்க்காமலேயே “உடம்பு சரியாயிட்டா” என்றார். அவனும் அவசர அவசரமாய் ஆமாம் போட்டுவிட்டுச் சொல்ல வேண்டியதைச் சொன்னான். “நீங்க என்னப் பார்க்க வந்தப்போ சொன்னேனே... கஷ்டப்படுற பொண்ணு. அது இதுதான்.”

“ஒகே ஒகே நீ சொன்னால் நான் தட்டுவேனா? எதுக்கும் டெப்டி டைரக்டர்கிட்டயும் சொல்லிடு.”

“காலையிலேயே சொல்லிட்டேன். ஒகே சொல்லிட்டார்.”

“எலக்ஷன் நம்பி பணத்தப் போடாதே, எலக்ட்ரிசிட்டிய நம்பி இலையப் போடாதே ஆபீசர நம்பி ஆமாம் போடாதே. எதுக்கும் அவரே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லட்டும்.”

தலைமை கிளார்க் சொல்வது கொஞ்சம் அதிகப்படியாக, இளங்கோவிற்குத் தோன்றியது. ஆனாலும் அங்கிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/209&oldid=636658" இலிருந்து மீள்விக்கப்பட்டது