பக்கம்:தாழம்பூ.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 199

“இந்தாம்மா ஒன்னத்தான், பெரிய சினிமா ஸ்டார்மாதிரி ஏன் போஸ் கொடுக்கிறே? என்னோட இந்த எச்சில் கிளாச கழுவிக் கிட்டுவா.”

சரோசா சப்த நாடிகளும் அற்றுப் போனவளாய் நின்றாள். எல்லோருமே, அவன் விரட்டுவதை, வேடிக்கை பார்ப்பதைப்போல் பார்த்தார்கள். அல்லாரும் என்னை ஏன் ஜென்மப் பகையா பார்க்கிறாங்கோ? ஒவ்வொருத்தனும் அண்ணாத்த மாதிரி தோனுதே.”

சரோசா, அந்த வேலையில் சேர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அந்த வேலையின் தலைகால் அவளுக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும், தலை கழுத்தில் இல்லாதது போலவும், கால் தரையில் படாதது போலவும் ஆடுகிற ‘ஆபீஸ் கம்மனாட்டிங்க போக்குத்தான் அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும், நாயின் மீது ஒரு கண்ணை வைத்தபடியே, அதன் அருகில் அமரும் காக்கா போல, எங்கிருந்தோ பறந்துவரும் அண்டங்காக்காவின் முட்கால்கள் உடம்பில் படாதபடி நகர்ந்து கொள்ளும் சிட்டுக்குருவிபோல, சரோசா அவர்களின் இருபொருள் படும்படியான பேச்சுக்களையும், தன்னைத் தாழ்த்தும் இளக்காரமான பார்வைகளையும் தாங்கிக்கொண்டாள். வேலையில் காயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக, உள்ளத்தின் காயங்களை ஊதிவிட்டுக் கொண்டாள். கோப்புக்களை து.ாக்கிக்கொண்டு, செக்ஷன் செக்ஷனாகப் போகும்போது பெருமையாக இருந்தது. எச்சில் டம்ளர்களை கழுவும்போது சிறுமையாக இருந்தது. அவளுக்கும் ஒரு முகம் இருப்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/213&oldid=636663" இலிருந்து மீள்விக்கப்பட்டது