பக்கம்:தாழம்பூ.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO தாழம்பூ

அனுமானிக்காமலே, அவளுக்கு எதிராக கிண்டலடிக்கும் பேர்வழிகளைப் பார்க்கும்போது அடித்து நொறுக்கலாம் என்பதுபோன்ற ஆவேசம் வந்தது. ஆனாலும் பொறுத்துக் கொண்டாள். இப்போது நாயினா அவளை சந்தோஷமாகப் பார்க்கிறார். ஆகையால் அலுவலகத்தில் தானும் சந்தோஷமாக இருப்பதாக அவரிடம் ஒரு பாவனை செய்து கொள்கிறாள். இளங்கோ, பல தடவை அவளைப் பார்த்து குசலம் விசாரித்தான். அவளுக்குப் பணம் தேவையா. என்று கூடக் கேட்டான். அவள் தன்னை அறியாமலே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அழுத்திக் கேட்டிருந்தால், கையை நீட்டியிருப்பாள்.

கடந்த பத்து நாட்களாக, அவளுக்கு எந்த வருமானமும் இல்லை. சரக்கு எடுக்கப் போகாததால், பைசா தேறவில்லை. துரை அண்ணனிடம் கேட்கலாம் என்றால், அவன், ஆந்திராவிற்கு சரக்கு வாங்கப் போய் விட்டான். கடைசியில் பூக்கார ருக்குமணிதான் இவள் கேட்காமலேயேகொஞ்சம் இவளுக்கும், இவள் நாயினாவுக்கும் ‘நாஷ்டாவுக்கு ஏற்பாடு செய்தாள். இவளும், தினமும் மாலையில் அந்தப் புடவையை ருக்குமணி வீட்டில் மடித்துவைத்துவிட்டு பைஜாமா வகையறாவை போட்டுக்கொள்வாள்.

அன்றும், அவள் வழக்கம்போல் பைஜாமா கோலத்தோடு நாயினாவுடன் கோவில் வளாக மண்மேட்டில் படுத்துக்கிடந்தாள். ஆபீசில் மொசைக் தரையில் நடந்துவிட்டு, சோபா செட்டில் அக்கம் பக்கம் பார்த்து உட்கார்ந்துவிட்டு, அந்தத் தரையில் இப்போது படுப்பதற்கு அவளுக்கு என்னமோபோல் இருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டாள். இந்த மாதச் சம்பளம், நாஷ்டா ஆயாவுக்கும், ருக்குமணியின் கடனுக்கும் சரியாயிருக்கும். அடுத்த மாதச் சம்பளத்தில், ஒரு குடிசைக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு குடித்தனம் போயிடலாம். எம்மாடி! ஒரு நாளைக்கி 30 ரூபா கொடுப்பாங்களாம். பள்ளிக்கூடத்துல ரொம்பவும் படிச்சிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/214&oldid=636664" இலிருந்து மீள்விக்கப்பட்டது