பக்கம்:தாழம்பூ.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 தாழம்பூ

சரோசா, தந்தையின் தலை நனையாமல் இருப்பதற்காக, தனது சட்டையின் பின்புறத்தில் கழுத்துப் பகுதியைத் துாக்கி, அவரது தலையில் முக்காடு மாதிரி போட்டுப் போர்த்தியபடியே நகர்த்தினாள்.நடக்கும்போதே அவரது சட்டையையும் வேட்டியையும் பிழிந்துவிட்டாள். அவர் உடம்பைத்தொட்டால் ஆபீசில்பிரிஜ்ஜை தொட்டது மாதிரி இருந்தது. முக்கி முனகிய நாயினாவை, அவள் துரை அண்ணன் வீட்டின் கொல்லைப்புறப் பந்தலுக்குள் கொண்டு போனாள். அங்கே படிக்கட்டில் உட்கார்ந்தபடி, முட்டிக்காலில் ஊன்றிய கைகளில் முகம் போட்டு, பக்கத்தில் இருந்த இருவர் மாறிமாறிச் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த துரை அவளைப் பார்த்து லேசாகத் தலையாட்டினான். ஆனால், பக்கத்தில் பாதி கிளாசோடு இருந்த அம்மைத் தழும்பன், அதட்டினான் :

‘நீ ஆரோ, நாங்க ஆரோ? எதுக்கும்மே வந்தே, ரோசங்கெட்ட கயிதே?”

இன்னொரு வஸ்தாவான இன்னாசி, அவளைப் பார்த்து, எழப்போன அம்மைத் தழும்பனை அழுத்தி உட்கார வைத்தான். சரோசாவைப் பார்த்து ஒரு இடத்தைக் காட்டிமோவாயை ஆட்டி உட்காரச் சொன்னான். அவளும் தந்தையை அந்தத் தரையில் படுக்கப் போட்டபடி அவரது உடைகளைத் தளர்த்தி விட்டாள். துரை சாக்களிடம் புலம்பினான் :

“அப்போ, நானு ஆந்திராவுக்கு சரக்கு எடுக்கப் போகிற போதெல்லாம், இங்கேயே சல்சா நடந்ததுன்னு சொல்றே!. ஒரு வருஷமா நடக்கிற விவகாரத்த. நீ துரோகி, என்கிட்ட - இந்த தோஸ்துகிட்ட - சொல்லல. இன்னாய்யா பிரெண்டு நீ?”

‘விட்டுத் தள்ளுப்பா... விஷயம் அதவிட முத்திட்டு.

அண்ணாத்தே கார் அனுப்புறார். அக்கா ஜம்முனு புறப்படறாள். மட்டுமரியாத இல்லாம பூட்டு, சே, பொம்மனாட்டியா அது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/216&oldid=636666" இலிருந்து மீள்விக்கப்பட்டது