பக்கம்:தாழம்பூ.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 203

சரோசா, வாயைக் கொடுத்தாள் :

“யோவ் இன்னாசி, அந்தப் பொம்மனாட்டிய திட்டிறியே, ஆனாங்காட்டி தொரண்ணன் கிட்டருந்து அவள அப்பிடி பிரிச்சு மயக்கின அண்ணாத்தைய பத்தி ஏம்ப்பா பேசமாட்டேங்கிற? ஒரு குடும்பத்தையே கலிஜி பண்ணிட்டாரே.”

“இந்தாம்மே எயிந்திரு. எயிந்திரு. சரியான கபீரிச்சி நீ!”

துரை, இரண்டாவது தோஸ்தின் தோளையும் தட்டி அமைதிப் படுத்தினான். ஒரு கையால் அவன் தோளை அழுத்தியபடி முன்னால் இருந்த கிளாளை இன்னொரு கையால் எடுத்து வாய்க்குள் தடதட வென்று விட்டான். பிறகு சற்றுத் தொலைவிலிருந்த இரண்டு கிளாஸ்களை எக்கிஎக்கி எடுத்தான். கண்ணாடி ஜாடியிலிருந்த மண் நிற திரவத்தை அவற்றில் முழுமையாக நிரப்பி, இன்னாசியிடம் கொடுத்து அவற்றை சரோசாவிடமும் அவள் நாயினாவிடமும் கொடுக்கச் சொன்னான். சரோசாவும் கொடுக்கப்பொறுக்காமல், அவற்றை வாங்கிக் கொண்டாள். ஒன்றை எடுத்து படுத்துக்கிடந்த நாயினாவின் தலையைத் துாக்கி, வாயை அகலப்படுத்தி ஒரு கிளாசை தலைகீழாகக் கவிழ்த்தாள். அது தடா சட்டம் மாதிரி வேகமாகப் பாய்ந்தது. இன்னொரு கிளாசை எடுத்து, தனது வாயருகே கொண்டுபோனாள். ஒரு வாரமாய் கிடைக்காத அமிர்தம். உள்ளே போனால் அது செய்யும் மாயாஜாலமே தனி, நிஜமே இல்லாத நிழல்களைக் காட்டும் மாய மருந்து துக்கத்தைக் கரைத்து அதையே சந்தோஷமாகக் காட்டும் சர்வ வல்லப திரவம்.

சரோசா, பூனை கருவாட்டைப் பார்ப்பது போல், அரசியல்வாதி பதவியைப் பார்ப்பதுபோல், அதைப் பார்த்தாள். அந்தச் சமயத்தில் இளங்கோ அவள் முன்னால் வந்து நிற்பதுபோல் இருந்தது. அவளை முகம் கழித்துப் பார்க்கிறான். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தது போல், அவளை வைத்த கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/217&oldid=636667" இலிருந்து மீள்விக்கப்பட்டது