பக்கம்:தாழம்பூ.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தாழம்பூ

பேசத்தான் முடிந்ததே தவிர, அடிதடியில் இறங்க மனமில்லை. அதோடு, இவள் அசல் ரவுடி மாதிரி தெரியுது. ஆளுதவி கிடைக்குமா என்று அந்தம்மா, அக்கம்பக்கம் பார்த்தாள். அத்தனை ஜன்னல்களும், பட்டுபட்டு என்று மூடின. ‘அடிப்பாவிகளா” என்று அனைத்து வீடுகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்துக் கத்தினாள். பிறகு வீட்டுக்குள், தனது அருந்தவப் புதல்வி மல்லிகா இருப்பது நினைவுக்கு வந்தது. சரோசாவை கோணிப் பையோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு கத்தினாள். திருடி. திருடி... ஒடியாங்க. ஒடியாங்க..!

ஆனாலும், சில வீடுகளில் வாசல்கள் திறக்கப்பட்டு சில பெண்கள் அவற்றை அடைத்து நின்றார்கள். சிலர் வெளியே வந்தார்கள். ஆனால் வீதிக்கு வரவில்லை. காரணம், அவர்கள் வீடுகள் அசல் காம்பவுண்ட் கவர்களால் அரண் கொண்டவை. இரும்புக் கம்பிகள் இல்லாத சுவர்க்காரிகள். அவர்கள் வந்த விதமும், பக்கத்து வீட்டுக் காரிகளை கையாட்டிக் கூப்பிட்டதோரணையும் ஒரு சண்டை சினிமாவைப் பார்க்கப்போகிறரசனையோடு நிற்பது போல் தோன்றியது. அந்த அம்மாவைப் பார்க்காமல் அந்தப் பெண்ணைப் பார்த்த பார்வை, அவளே வெற்றிபெற வேண்டுமென்று நினைப்பது போலவும் இருந்தது. எல்லோரையும் அடக்கி வைப்பது போல் அந்தத் தெருவே குலுங்கும்படி குரலெழுப்பும் அந்த அம்மாவுக்கு எதிர்க்குரல் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை பறிமாறிக் கொள்வது போல் நின்றார்கள். சிலர் தொலைநோக்காய் பிரச்சினையை அணுகி வருத்தப்பட்டாலும், பலர் இந்த மாதிரியான சண்டைக்காக தத்தம் வீடுகளிலும் சில சில்லரைத் திருடடுகள் நடந்தால்கூட பரவாயில்லை என்பது போல் பார்த்தார்கள்.

“ஏய் மல்லி! போலீகக்கு போன் பண்ணிட்டு இங்க வாடி. முவள விடப்படாது. முதல்ல போன் போடு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/22&oldid=636670" இலிருந்து மீள்விக்கப்பட்டது