பக்கம்:தாழம்பூ.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 207

சரோசா, குப்புறக் கிடந்த துரை அண்ணனையும், தன்னை அந்நியமாகப் பாவித்த, ஒரு காலத்தில் அன்யோன்யமான தோஸ்துகளையும் பார்த்துப் பொருமினாள். கீழே கிடந்த தந்தையை து.ாக்கினாள். அவர் துள்ளலாய் எழுந்து நீராவி எஞ்சின்போல் நடந்தார். சரோசாவை, இப்போதுகேரேஜ்போல இழுத்துக்கொண்டு போனார். துரையின் தர்ம பத்தினி வீட்டுக்குள் டெலிபோனைச் சுழற்றி, கோபம் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அப்புறம் அழுதாள், இன்னிக்கேவெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாகணுமாம்.

சரோசாவும், நாயினாவும் கோவில் வளாகத்திற்கு வந்தார்கள். நாயினா வந்ததும், வராததுமாக அந்த ஈரமண்னில் அப்படியே குடைசாய்ந்தார். மழை விட்டிருந்தது. வானம் பன்னிர் தெளிப்பதுபோல் மட்டும்தான் துாறியது. சரோசாவுக்கு துாக்கம் வரவில்லை. பாவம் துரை அண்ணன்! பெண்டாட்டிய கள்ளுமாதிரி வெள்ளையா நினைச்சான். ஆனா, அது விஷச் சாராயமாயிட்டு.!

சரோசாவுக்கும் கண் அயர்வு ஏற்பட்டது. நாயினா குறட்டையோடும் சத்தம் அவள் துாக்கத்திற்கு தாலாட்டு போல் கேட்டது. திடீரென்று ஒரு சத்தம். இன்னாது, ஆட்டோ? யாரும் சினிமாவுக்குப் போயிட்டு வாறாங்களா?

சரோசா படுத்தபடியே தலையைத் துாக்கியபோது, அந்த ஆட்டோவிலிருந்து நான்கைந்து பேர்கள் குதித்தார்கள். இரண்டுபேர்கையில் பட்டாக்கத்திகள், ஒருவன் கையில் சைக்கிள் செயின். மீதி இருவருக்கு உடம்பே ஆயுதம், ஆறுபேரும் டார்ச் லைட்டை அடித்தபடியே அங்கமிங்குமாய் பார்த்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/221&oldid=636672" இலிருந்து மீள்விக்கப்பட்டது