பக்கம்:தாழம்பூ.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரோசா அந்தக் கும்பலை உணர்வற்றபடியே பார்த்தாள். இன்றைக்கு எப்படியும் ஒருவழியாகிவிடப் போகிறோம் என்ற உணர்வு, அவளைத் தப்பிக்கும் வழியை நினைக்க முடியாமல் தடைபோட்டது. உயிரற்றவள் போல் கீழே கிடந்தாள். இதற்குள், அந்த ஆசாமிகள் சேரிக்கு இட்டுச் செல்லும் இடுக்குவழிக்குப் போனார்கள்.

சரோசாவுக்கு என்றே புதிய பங்குத்தந்தையால் தாளிடப்பட்ட அறையை நோக்கிப்போனார்கள்.ஒன்றாய்ப்போய்க்கொண்டிருந்த அனைவரும்பிறகு ஆளுக்கொருபக்கமாகப்பிரிந்து அங்குமிங்குமாய் தேடினார்கள். பிறகு எல்லோருமாய் ஒன்றாகக் குனிந்து அவள் இருந்த பக்கமாக ஆறு தலைகளையும் ஒரே தவைகளாக நிமிர்த்தினார்கள். சரோசாபம்மிக்கொண்டேபார்த்தாள்.பழக்கப்பட்ட இருவர் குரல், பழகாத நால்வர் குரலுடன் கலந்திருந்தது. காவல்நிலைய வளாகத்திற்குள் இளநீர் குடித்துக்கொண்டிருந்த இளங்கோவை அடிப்பதற்காக எகிறினானே ஒரு தோஸ்து-மணிஅவன் இப்போது பட்டாக்கத்தி அந்த இருட்டில் மின்ன, கோர தாண்டவம் ஆடுவதுபோல் அவளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

சரோசா நாய்னாவை உற்றுப் பார்த்தாள். அவர் தானில்லாமல் வாழப்போகும் நிலையை நினைக்க நினைக்க, அவளுக்கு ஒரு தற்காப்பு உணர்வை ஏற்பட்டது. உயிர் காக்கும்படி அக்கம்பக்கம் எழும்படி அலறலாமா..?வேறு வினையே வேண்டாம். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதை! அவர்கள் மெல்ல நகர்ந்தபோது, லேசாய் குறட்டைவிட்ட தந்தையின் வாயை அவள் அழுத்த, அவர் மூச்சுத் திணறலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/222&oldid=636673" இலிருந்து மீள்விக்கப்பட்டது