பக்கம்:தாழம்பூ.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 209

கண்விழித்தார். ஏதோ பேசப்போன அவர் வாயை ஒரு கையால் அடைத்தபடியே “ஆபத்து! ஆபத்து அதோ, அண்ணாத்தேயின் கொலைகார கோஷ்டி” என்று கிசுகிசுத்ததும், அவர் அவளைத் தப்பிப் போகும்படி சைகை செய்தார். அவளுக்குத் தெரியும் - இந்த மாதிரி சமயத்தில் குறிபார்க்கப்பட்ட ஒன்று கிடைக்கவில்லை என்றால், கொலைகாரக் கோஷ்டியினர் அந்தக் குறியின் துணையைப் பழி வாங்கி விடுவார்கள். அவள், தான் தப்பித்து, நாய்னாவுக்குக் கொலைத் தண்டனை வாங்கிக் கொடுக்க விரும்பவில்லை. நாயினாவை தன் பக்கமாக இழுத்து, அவள் தரையில் தவழ்ந்தாள். மூச்சைக்கூட மெல்ல விட்டபடியே ஊனமுற்றவனைப் போல், இரண்டு கைகளையும் கூட கால்களாக ஆக்கி, நாயினாவையும் இழுத்து இழுத்து தவழச் செய்து, அந்தக் கோயில் வளாக வாசலுக்கு வெளியே வந்துவிட்டாள். உடனடியாக நாயினாவை தூக்கி நிறுத்தி, தாங்கிப் பிடித்து, தேநீர் பக்கக் கடைகளின் கவர்கள் வழியாக நகர்த்தி, நகர்த்தி, அவற்றில் சாய்த்து, சாய்த்து, சில இடங்களில் இருந்து, இருந்து, அவர் “அய்யோ வலிக்கி, வலிக்கி” என்று போட்ட அலறல் சத்தத்தையும் பொருட்படுத்தாது, இழுத்துக்கொண்டே ஓடினாள். கும்மிருட்டான அந்தக் கடலோரச் சாலையில், இருளின் நிழல்போல் பாய்ந்தாள்.

திடீரென்று ஒரு பிளிறல் - ஒரு கர்ஜனை - ஒரு அட்டகாசச் சிரிப்பு பிறகு அத்தனையும் சேர்ந்த ஒரு சவால்.

“டயாய்க்கவா பார்க்கிறே? ஒம்மாள. ஒன்ன விடப்போறதா இல்ல. டாய் தாமஸ், மடக்குடா. மொதல்ல அந்த கெயவன பிடிங்கடா. அவள் தானாய் கிடப்பாள். ஏய். ஆய். ஊய்.”

சரோசா, திரும்பிப் பார்த்தபோது, அந்த ஆறுபேரும், இன்னும் எங்கேயோ நின்ற இரண்டு பேரும் எட்டாகி, அவர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/223&oldid=636674" இலிருந்து மீள்விக்கப்பட்டது