பக்கம்:தாழம்பூ.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தாழம்பூ

நோக்கி எட்டடி எட்டடியாய் பாய்வதுபோல் ஓடிவந்தார்கள். அவளையும் நாயினாவையும், அந்தச் சாலையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களை விடப்போவதில்லை என்பதுபோல் மூன்று பேர் பக்கவாட்டிலும், எஞ்சியவர்கள் பின்னாலும் ஓடிவந்தார்கள்.

சரோசா, கத்திக் கத்திக் கதறினாள் : ‘எங்களைக் காப்பாத்துங்கோ. காப்பாத்துங்கோ. கொல்றதுக்கு முன்னாடி காப்பாத்துங்கோ கும்மாளம்மா.. மாரிம்மா. வேளாங்கண்ணி. காப்பாத்துங்கோ”

அந்தச் சாலையோரமாய் இருந்த குடியிருப்புகளில் சில விளக்குகள் அந்த வீடுகளை எரியவைப்பது போல் எரிந்தன. ஆனால், கதவுகளோ, ஜன்னல்களோ திறக்கப்படவில்லை. பாவம் சில சொரி நாய்கள்தான் அவளுக்கு உதவிக்கு வருவது போல் ஓடிவந்து, பின்னால் துரத்தும் கும்பல்களையும், பக்கவாட்டில் கொலைத்தனமாய் நடந்த பேர்வழி களையும் பார்த்துக் குலைத்தன. பிறகு அவர்கள் கீழே எதையோ எடுப்பது போல் குனிந்து நிமிர்ந்தபோது, அந்த நாய்கள் வால்களை பின்னங்கால்களுக்கு இடையே செருகிக்கொண்டு ஓடிவந்த வழியிலேயே திரும்பி ஒடின.

சரோசா, தன்னை அறியாமலேயே உயிர்காக்கும் அனிச்சை உணர்வில், நாயினாவை சாலையிலேயே விட்டுவிட்டு ஓடினாள். அரைநிமிட ஒட்டத்திற்குப் பிறகு ஒன்று புரிந்தது. திரும்பிப் பார்த்தால், அவளை “போ.போ..” என்று நாயினா குரலிடுவது கேட்டது. பிறகு அவர் அந்த கொலைகாரக் கும்பலை நோக்கியே, அவளுக்காக அவர் வழிமறிக்கப் போவது போல் நடப்பது தெரிந்தது. சரோசா மனதில் ஒரு வாயுவேக எண்ணம். பர்மா காடுகளில் குழந்தை குட்டிகளை விட்டுவிட்டு ஓடிவந்த மனிதர்களுக்கு மத்தியில், மனைவியையும், பிள்ளைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/224&oldid=636675" இலிருந்து மீள்விக்கப்பட்டது