பக்கம்:தாழம்பூ.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

க. சமுத்திரம் 213

தட்டினார். பிறகு, அவர்கள் கொலை செய்யப்பட்டு அப்படிக் கிடக்கிறார்களோ என்று பயந்துபோய் கீழே குனிந்தார். இதற்குள், சரோசா உடம்பை அசைக்காமலே கண்களை அசைத்தாள். ஒருசாய்த்துப் படுத்துக்கிடந்த தந்தையை தன் மடியிலே போட்டுக்கொண்டு போலீஸ்காரரை மலங்கமலங்கப் பார்த்தாள். அவர் அதட்டினார் :

‘ஏய், ஒன் பேரு சரோசாதானே? இளங்கோன்னு ஒருத்தனோட விவகாரம் பண்ணிட்டு லாக்கப்ல. இருந்தது நீதானே? என்ன நடந்தது?”

சரோசா,மெல்லமெல்ல கய உணர்வுபெற்றாள்.நாயினாவை உற்றுப் பார்த்தாள். அவரும் சரி, தானும் சரி, இன்னும் வெட்டுப் படவில்லை என்றமெய்யுணர்வு உந்த,மெல்ல எழுந்தாள். கடப்பட்ட கொக்கோடு கடாமலே செத்துப் போனதாய் அனுமானித்துக் கீழே விழும் கொக்கு போல், கைகளை விரித்து தரையில் கிடந்த நாயினாவை உகப்பினாள். பிறகு அந்த போலீஸ்காரரின் இரண்டு கால்களையும் கட்டிப் பிடித்துக்கொண்டு, அவர் முட்டிக்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டே விம்மி, விம்மிப் பேசினாள்.

‘பேசாம என்னை இன்ஸ்பெக்டர் சொன்னாப்போல வேலூருக்கு அனுப்பிடுங்க சாரே, வாழ்ந்தும் பிரயோசனமில்ல. இருந்தும் பிரயோசனமில்ல சாரே. அண்ணாத்தே என் ரத்தத்தக் குடிக்கத் துடிக்கான் சாரே. நாயினா! நாயினா! நாம நாளைக்கி எப்படியோ, இன்னிக்கி பிழைச்சிட்டோம், நாய்னா!”

திருமலையப்பன், அவளின் நாயினாவை துக்கிநிறுத்தினார். கீழே கிடந்த கோணிப்பையை எடுத்து அவர் முதுகில் போர்த்தினார். அந்தப் போர்வையின் மேல் தன் உடம்போடு கிடந்த கம்பளியை எடுத்துப் போட்டார்.

‘நல்ல வேளை, பீட்டுக்கு டூட்டி போட்டதுனால பிழைச்சிங்க, சரி, என் பின்னால நடங்க. சாப்பிட்டீங்களா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/227&oldid=636678" இலிருந்து மீள்விக்கப்பட்டது