பக்கம்:தாழம்பூ.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214. தாழம்பூ

சரோசா எதுவும் பேசாமல் நாயினாவை தோளில் சாய்த்துக் கொண்டு திருமலையப்பனைத் தொடர்ந்தாள். மூவரும் மணல் மேட்டுக்குவந்தார்கள்.அவர்'உங்கள் நண்பன் கூண்டைத் திறந்தார். நாயினாவை தோளைப் பிடித்து அழுத்தி, அவரே கீழே உட்கார வைத்து, மரச்சுவரில் சாயவைத்தார்.பிறகு சரோசாவை'நடந்ததைச் சொல் என்பது மாதிரி பார்த்தார். கீழே உட்கார்ந்திருந்த சரோசா அவரை அண்ணாந்து பார்த்தாள். பார்க்கப் பார்க்க பயம் போய் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. மனச்சுமையை சொல்லிக் சொல்லி அதை குறைத்தாள். இளங்கோவிடம் கருக்கமாகச் சொன்ன தனது வரலாற்றை, அவரிடம் விலாவாரியாகச் சொன்னாள். ஒவ்வொரு கட்டத்திலும் ‘ஆருமே இல்லாமே பூட்டோமே சாரே என்று மூச்சு முட்டச் சொன்னாள். அத்தனையும் சொல்லிவிட்டு அதற்குமேல் எதுவும் இல்லை என்பதுபோல் அவரை வெறுமையோடு பார்த்தாள். அவள் கதையை பேச்சற்றுக் கேட்ட திருமலையப்பன், ஐந்து நிமிட மவுனத்திற்குப் பிறகு அறிவுரை சொன்னார்.

“இனிமேல் இந்தப் பக்கம் இருந்தீங்கன்னா, ஒங்க உயிருக்கு ஆபத்துதான். எங்கே இருக்கப் போறதா உத்தேசம்?”

“அதான் சார் புரியலே”

“ஒரு வாரத்துக்கு நீ சொல்றியே ருக்குமணி அவள் வீட்டுல உன்னால தங்க முடியுமா? அப்படி முடிஞ்சா, நல்லது. அதுக்குள்ளே நானும், கமிஷனர் ஆபீஸ் க்ரைம் செக்ஷனுக்கு ஒன் போல ஒரு மனு தயாரிக்கிறேன். லோக்கல நம்பிப் பிரயோசனமில்ல. தின்னிப் பசங்க. ஒன் அண்ணாத்தைய பத்தி விவரமா எழுதறேன்.”

“அப்போ, எங்க உயிருக்கு கேரண்டிதானே சாரே?”

“தலைவருங்க உயிருக்கே கேரண்டி இல்லாத காலத்துல, பாவம் ஒன்னமாதிரி தலை காஞ்சவங்களுக்கு எந்தப் போலீஸ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/228&oldid=636679" இலிருந்து மீள்விக்கப்பட்டது