பக்கம்:தாழம்பூ.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 9

போலீஸ் என்றதும், சரோசாவுக்கு லேசாய் பயம் பிடித்தது. “ஏரியா போலீஸ் என்றால் பயமில்லை. ஒருவேளை அவசர போலீகன்னா, ஆபத்தாச்சே.

உள்ளே, ஒரு மாத நாவலை மெய்மறந்து படித்து, ஒரு கற்பனைக் காதலனுடனோ, அல்லது நிசக் காதலனை நினைத்துக் கொண்டோ, ரசித்துக் கிடந்த மல்லிகா, வெளிவந்து எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே அவசர அவசரமாய் ஒடி, டெலிபோன் பக்கம் போனது தெரிந்தது. உடனே, அவள் அம்மாவும் திமிறிக்கொண்டிருந்த சரோசாவை வலுக்கட்டாயமாக, மூச்சுமுட்ட இழுத்துக் கொண்டிருந்தாள்.

சரோசா, வழிமறித்தவளை மல்லாக்கத் தள்ளப்போனாள். பிறகு அது கொலைக் கேசாகிவிடும் என்று அந்த நேரத்திலும் நினைத்து, அவள் ஒரு கையை பிடித்துத் திருகி, ஒரு ஒரமாகத் தள்ளி, அவள் இரண்டு கால்களையும் தனது கால்களால் தட்டிவிட்டு, கீழே ஆரஅமரக் கிடத்திவிட்டு, நடந்தாள்.

ஒரு கையை கீழே ஊன்றியபடி விழுந்த அந்தம்மா, அந்தக் கை ஒடிந்துவிட்டதா, அல்லது பிசகிவிட்டதா என்று தெரியாமல் அந்தக் கையையே பார்த்தபடி “அய்யோ, அம்மா, அய்யோ... அம்மா...’ என்று அரற்றினாள். அவள்ால் எழுந்திருக்க முடியவில்லை. மல்லிகா அங்கே அலறியடித்து வந்து அம்மாவைத்தான் பிடித்தாளே தவிர, “அவளை பிடிடி, பிடிடி” என்று அந்த வேதனையிலும் ஒரு சாதனையை நடத்தச்சொன்ன தாய்காரியின் ஆணையை அவளால் நிறைவேற்ற முடியவில்லை. பாதி, பயம்; மீதி, அசல் சோம்பம்.

சரோசா, கை நழுவி விழுந்த கோணி மூட்டையை மீண்டும் தூக்கிக்கொண்டு எகிறிக் குதித்த சுவர் பக்கமாய் ஒடியபோது, அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபன், அம்மா கீழே கிடப்பதைப் பார்த்து வாகனத்தை ஆப் செய்யாமலேயே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/23&oldid=636681" இலிருந்து மீள்விக்கப்பட்டது