பக்கம்:தாழம்பூ.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் ஆ17

பிறகு இன்னிக்கிச் சொல்றார்” என்று கேட்டாள். ருக்குமணி கூட திடுக்கிட்டு கூடையிலிருந்து எடுத்த பூவை பாம்பு மாதிரி கருட்டி வைத்தாள். இளங்கோ சிறிது அசந்துவிட்டு பிறகு “அப்பாவைப் பத்தி ஒனக்குத் தெரியாதம்மா? அரை மணி நேரத்தில் சாப்பிட்டது என்னன்னு கேட்டாக்கூட அவருக்குத் தெரியாதே. அந்த சரோசா நம்மக்கிட்ட தப்பிச்சிட்டாலும் ஒரு கொல கேகல மாட்டிக்கிட்டு வேலூர்ல. இருக்காள். திரும்பி வர்றதுக்கு ஆறு வருஷம் ஆகும்” என்றான். அதோடாவது அவன் விட்டிருக்கலாம்; “வேணுமுன்னா நம்ம ருக்குமணியைக் கேளு” என்றான். உடனே ருக்குமணியும் ஆமாம் போட்டாள்.

அப்போது பாக்கியம்மாளும், அவர்கள் பதிலில் சமாதானம் ஆனவள்போல், அங்கில்லாத கணவனை ஒரு பிடிபிடித்தாள். ‘பாவி மனுஷன் எனக்குன்னு வாய்ச்சாரு பாரு. ஆட்கள அடையாளம் காணுறது அவருக்குக் குதிரக்கொம்பு மாதிரி. ஒரு தடவ கோயிலுக்குப் போனோம். நானுன்னு நினைச்சி, அம்பாள் குங்குமத்த இன்னொருத்தி நெத்தியில வெச்சி, கைய ஒடிக்க கொடுத்தவரு. இவரையும் வேலூருக்கு அனுப்பணும். அப்பதான் என் மனக ஆறும்.”

இந்தப் பின்னணியை யோசித்துக் கொண்டிருந்த பாக்கியம்மாளுக்கு, இப்போது கோபம் கொந்தளித்தது. கணவனே கை நீட்டாத தன்னை அடித்துப் போட்டவள், வேலூரில் இருக்காமல் இதோ விலாப்பக்கம் நிற்கிறாள்! இந்தப் பூக்கார முண்டையும், அந்தப் பையித்தியக்காரப் பய இளங்கோவும் தன்னைப் பைத்தியமாக்கி விட்டதில் ஆவேசம். பேசாத பூக்காரியைப் பார்த்து, இவளே பேசினாள். ஆசை மகளுக்கு நிச்சயமாகி விட்டதால், நாளை நிச்சயதாம்பூலத்திற்காக, பூவுக்குச் சொல்ல வந்தவள், இப்போது சாவுக்குச் சொல்பவள்போல் சொன்னாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/231&oldid=636683" இலிருந்து மீள்விக்கப்பட்டது