பக்கம்:தாழம்பூ.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தாழம்பூ

“ஏண்டி பூக்காரி, ஒய்யாரக் கொண்ட எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். எதுக்குடி பொய் சொன்ன? அந்த அப்பாவிப் பயலுக்கு இவள நீ கூட்டிக்குடுத்தியா, இல்ல இவள் ஒன்னைக் கூட்டிக் குடுத்தாளா? சொல்லுடி. எதுக்குடி என் அப்பாவிப் பையனோட சேர்ந்து நாடகம் போட்டே?”

பூக்கார ருக்குமணி, சரோசாவைப் பார்த்தாள். அவளோ, இப்படிப் பேசியதற்கு பழையவளாக இருந்திருந்தால், கெய்வியை பின்னியிருப்பாள் பின்னி. இப்போது முடியவில்லை. ஆனாலும், இளங்கோ சாரோட அம்மாவாச்சே. பால பார்க்கிறதா, இந்த பாலுப் பானை வயித்தப் பார்க்கிறதா? சரோசா நாயினாவின் முதுக்குப் பின்னால் தலையை குனித்துக் கொண்டாள். கோவிந்துதான், பாக்கியம்மா கண்ணுக்கு முன்னால் விரல்களை ஆட்டியபடியே பேசினான். இப்போது அவன் வயிற்றுக்குள் சாராயம் இல்லை, பசிதான் இருந்தது. அதுவும் கோபத்தைக் காட்டியது.

“பெரிய மனுஷி பேசறபேச்சா இது? ஒன் வயகக்காக விட்டு வைக்கேன். எனிக்குக் கோபம் வர்றதுக்கு முன்னாடி மரியாதையா பூடு”

ருக்குமணி, கணவனைப் பிடித்து ஒரு ஒரமாகத் தள்ளினாள். அப்போது பாக்கியம்மாள் போட்ட கத்தலில் அக்கம் பக்கம் சந்தோஷப்பட்டுத் திரண்டது. பாக்கியம்மா, கோவிந்தை இளக்காரமாய் பார்த்தபடியே பதிலடி கொடுத்தாள்.

‘பெண்டாட்டி பவுசு தெரியல, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? என் மகனப் பார்க்கும்பொதெல்லம், இவள் எதுக்கு கிசுகிசுன்னு பேசினாள்னு கேளு. இதோ, கோவில் மாடு மாதிரி தெருவில் திரியுறவள, எதுக்காக ஜெயிலுல இருக்கறதா பொய் சொன்னாள்னு கேட்டுப்பாரு. அப்போதான் நீநெசமான ஆம்புள.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/232&oldid=636684" இலிருந்து மீள்விக்கப்பட்டது