பக்கம்:தாழம்பூ.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 219

கோவிந்துக்கு, லேசாய் கலக்கம் ஏற்பட்டது. ஆமாம், இந்தப் பெரியம்மா சொல்றாப்புல இந்த ருக்கு எதுக்குப் பொய் சொல்லணும்? அறியாத பிள்ளாண்டானோட எதுக்கு இவள் கிசுகிகக்கணும்? பழைய பாடாதி படமனாலும் நேத்துப் பார்த்த துாக்குத்துக்கி சினிமாவுல கொலையும் செய்வாள் பத்தினின்னு நிரூபிச்சாங்களே; அப்படிப்பட்ட பத்தினியா இவள்? அதான் நான் நைட்டுல ஆசையா கூப்பிட்டா, கழுத்தப் பிடிச்சி வெளியில தள்ளுறாளா?

கோவிந்து கோபமாகப் புலம்பினான் : “ஏம்மே, பெரிம்மா பேச்சுக்கு பதில் சொல்லும்மே.இல்லாட்டி அந்தம்மா கேட்டதெல்லாம் நானு கேட்டதா அர்த்தம். ஏம்மே சொம்மா வாய்செத்து நிக்கே? ஒனிக்கி அந்தப்பிள்ளக்காப்பையன், ஒசத்தியா பூட்டான், ஒரு பவுனு தாலிபோட்ட நானு மட்டமா பூட்டேனா?”

ருக்குமணி, இடுப்பிலிருந்த கையை எடுத்து கன்னத்தில் வைத்தாள். சொன்னால் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். அதுவே மீண்டும் போலீஸ் விவகாரமாகி, சரோசாவுக்கு விகாரமாகும். சொல்லாவிட்டால் இதுவரைக்கும் குடிகாரனாய் மட்டும் இருக்கும் ஆம்புடையான், கொலைகாரனாய் மாறுவான். “ஏய் ஒன்னத்தாம்மே, ஒனிக்கு யாருமே புருஷன்?” “அவள் எப்படிப்பா பதில் சொல்லுவா? திருடனுக்குத் தேள் கொட்டினதுமாதிரி இருக்கும். ஏண்டி, போயும் போயும் என் அப்பாவி மகன்தானா ஒனக்குக் கிடைச்சான்?கெடக்க முடியாட்டி வேறு எவனையாவது பிடிக்க வேண்டியதுதானேடி. ஒன் மூடு மந்திரத்த கட்டுன புருஷன்கிட்டயாவது காட்டுடி”

கோவிந்து, பாக்கியம்மாளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அடியாய் கீழே குனிந்து, அரிவாள்மனையை எடுத்தபடி நிமிர்ந்தான். அதைப் பார்த்த ருக்குமணியோ சிறிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/233&oldid=636685" இலிருந்து மீள்விக்கப்பட்டது