பக்கம்:தாழம்பூ.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 22,

அவளுக்கே வேலையும் வாங்கிக்கொடுத்த மகனின்மீது எரிச்சல் வந்தது, அந்த எரிச்சல் அந்தப் பெண்களை எரிக்காமல் எரித்தது : “ஆகக்கூடி, ரெண்டு தட்டுவாணிகளும் தர்மரு மாதிரி இருந்த என் மவன பாடாபடுத்தி இருக்கீங்க. ஏண்டி ருக்கு, எல்லாமே முடிச்சிட்டியா, இனிமேத்தானா?”

“இந்தா பாரு பெரிம்மா, என்னப் பேசு, வேணாங்கலே. காறித் துப்பு, கண்டுக்கல. இந்த ருக்கப் பத்திப் பேசின, மரியாதையில்ல. எனிக்கி ஒன் மகன் கொடுத்த வேலையைவிட இந்த ருக்குவோட மானம்தான் பெரிக”

“என்னடி செய்வே எருமைமாடு?”

“எங்கே இன்னொருவாட்டி இந்த எருமைமாடு கேக்கும்படியா சொல்லு பார்க்கலாம்; வாயி வெத்துல பாக்கு போடுதா, இல்லியான்னு பாத்துடலாம்.”

பாக்கியம்மாளுக்குப் பயம் வந்தது. பழைய அனுபவத்தை மனதில் வைத்தபடி, வேகவேகமாய் நடந்தாள். திரும்பிப் பார்க்காமலே போலீஸ் நாய் போவதுபோல் போனாள். தெருமுனையில் மட்டும் நின்று ஆங்காரமாகத் திரும்பினாள். ருக்கு சரோசாவின் மார்பில் தலை போட்டுப் புரண்டாள். கோவிந்து தனது தலையிலேயே அடித்துக் கொண்டான். அக்கம்பக்கங்கள், பாக்கியம்மாவை விட்டிருக்கக் கூடாது என்று உபதேசித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/235&oldid=636687" இலிருந்து மீள்விக்கப்பட்டது