பக்கம்:தாழம்பூ.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக்கியம்மா, கால்களை குலுக்கிக் குலுக்கி நடக்கவிட்டு வீட்டுக்குள் வந்தபோது, வெளியே சட்டைப் பட்டன்களைப் போட்டபடியே புறப்பட்ட கணவன் கப்பையாவை, உள்ளுக்குள் தள்ளினாள்.

“பாவி மனுஷா ஒம்ம புத்தியாலதான், நான் நாயிகிட்டயும், பேயிகிட்டயும் சீரழியறேன். ரமணன் அண்ணாச்சிய உடனே வரும்படி, டெலிபோன் செய்யும்.”

“ஒரு காலு ஒரு ரூபாய். கவர்மெண்டு சிக்கனத்தக் கடைபிடிக்கச்சொல்லி இருக்காங்கோ.நானேபோயி கூட்டிக்கிட்டு வாறேன். ஏன் இப்படி தங்குதங்குன்னு குதிக்கிறே?”

“அதையாவது தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே. முதல்ல சொன்னதச் செய்யுங்க. டெலிபோன்ல நான் சொன்னேன்னு ரமணன் அண்ணாச்சிய வரச்சொல்லுங்க”

“ஏன், நான் சொன்னேன்னா வரமட்டாரோ?”

“என் தலைவிதி, ஒம்ம மாதிரி லூக மனுஷன கட்டி, பயித்தியக்கார மவனப் பெத்து சீரழியறேன். இன்னுமாய்யா, டெலிபோன் பண்ணல?”

கப்பையா, மிரண்டுபோய் டெலிபோன் இருக்கும் அறைக்குள் போனார். நாளை நடைபெறவுள்ள நிச்சயதாம்பூலத்திற்கு கதாநாயகியாகும் செல்லமகள் மல்லிகா, அம்மா போட்ட கூச்சலில் மிரண்டு போய் தன்னைப் பிடிக்கவில்லை என்று பிள்ளை வீட்டார் சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் எழ, பதில் கூச்சல் போட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/236&oldid=636688" இலிருந்து மீள்விக்கப்பட்டது