பக்கம்:தாழம்பூ.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 223

“எனக்குத் தெரியும் இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு. நேத்து நீ போட்ட சத்தத்திலேயே அவரு பயந்து ஒருமாதிரி ஆயிட்டாரு.”

“இந்த வீடே ஒரு பயித்தியக்கார ஆஸ்பத்திரி. ஒனக்கு இப்பவே புருஷனப் பத்தின அவ்வளவு அக்கறை. எனக்கு வாய்ச்ச இடிச்சபுளி மாதிரி ஒனக்கு வாய்ச்சிடப்பிடாதேன்னு எனக்கு அக்கறை, யோவ் பாவி மனுஷா, டெலிபோனை ஏய்யா, தோளுல வச்சிக்கிட்டு பித்துப்பிடிச்சி நிக்குறிங்க? டேய் இளங்கோ, நில்லுடா. அப்படியே நில்லு, ஒரு ஒடி நகரப்படாது.”

இளங்கோ, குளியலறையில் இருந்து வெளிப்பட்டு, அப்படியே நின்றான்.

“ஏண்டா முளைச்சி மூணு இலை விடல, பெத்தெடுத்த தாய்கிட்டயே நாடகம் போட்டுட்டியே. எதுக்குடா அந்த சேரி ரவுடி என்ன ஆள்வெச்சு அடிச்சத என்கிட்ட சொல்லல? அதுக்குப்பிறகும் அவளுக்கு ஒன் ஆபீகலயே வேலை வாங்கிக் கொடுத்திருக்கே. அப்பதான் அவள் பழையபடி ஒன்ன அடிக்கமாட்டான்னு நினைக்கிறியா? நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? ஒங்கப்பன் புத்திதானே ஒனக்கும் இருக்கும்.”

பாக்கியம்மா, மேலும் அடுக்கிக்கொண்டே போயிருப்பாள். அதற்குள்மிஸ்டர்.ரமணன் அவசரத்தில்லுங்கி பனியனோடு வந்தார். அவருடன் பாமா ஆபீஸ் மேக்கப்போடு வந்தாள். பாக்கியம்மா, அவரிடம் முறையிட்டாள்:

‘தப்புப் பண்ணிட்டியளே அண்ணாச்சி, தப்புப் பண்ணிட்டியளே. இந்தப் பயல அந்த சேரி ராட்சசி ஆளு வச்சு அடிக்சிருக்காள். அத அந்த தட்டுவாணி ருக்குமணி ஆக்ஸிடெண்டுன்னு சொல்லிட்டாள். நீங்களும் நம்பிட்டியளே, மோசம் போயிட்டியளே.”

மிஸ்டர் ரமணன் திடுக்கிட்டார். இந்தம்மா எதுக்காக, தான் ஏதோ தப்பு செய்தமாதிரி குதிக்கிறாள்? வாட் இஸ் திஸ்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/237&oldid=636689" இலிருந்து மீள்விக்கப்பட்டது