பக்கம்:தாழம்பூ.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 225

“வாங்க டாடி, இனிமேல் இந்த வீட்டுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை. எப்போ நான் மலையா நம்பின ஒருத்தர், என்கிட்ட எதுவுமே சொல்லாமல், என்னை முட்டாளாக்கினதா தெரிஞ்சுதோ, அதுக்குப் பிறகும் உறவு வச்சுக்கறது நம்ம சுயமரியாதைக்கி சரியா வராது. நான் கயமரியாதைக்காரி. நாளைக்கி அந்த சேரி கேர்ள் என்னையும் அடிப்பாள். இவரு அதுக்காகவே அவளுக்கு வேலையில பிரமோஷன் போட்டுக் கொடுப்பார். ஒருதலை நம்பிக்கை ரொம்ப மோசம். டாடி! இன்னுமா அந்த வீட்டுக்குள்ள இருக்கீங்க? உங்களுக்கு சுயமரியாதை இல்லியா?”

ரமணன், தனது சுயமரியாதையை நிரூபிக்க எழுந்தார். எவரையும் திரும்பிப் பார்க்காமலேயே வாசலுக்கு வெளியே வந்தார். பாமா அவரை இழுத்துக்கொண்டு போவது தெரிந்தது. இளங்கோ பல்லைக்கடித்தான்.கடைசியில் இந்த சரோசா,நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்ச கதையா ஆகிட்டுதே!

சரோசா தோளில் கறுப்புக் கயிறு போட்ட சிவப்பு பிளாஸ்கை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். அந்த பிளாஸ்க் வயிற்றுக்கு மேலே அங்குமிங்குமாய் ஆடியது. அவளது இரண்டு கரங்களிலும் இரண்டு பொட்டலங்கள். கிட்டத்தட்ட சர்க்கஸ்காரி மாதிரி உடம்பை பாலன்ஸ் செய்துகொண்டு அலுவலகத்திற்குள் போனாள். அரசாங்க காண்டின் சரியில்லை என்று வெளியே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒட்டலில் வாங்கிக்கொண்டு வரச் சொல்லியிருந்தார்கள். அவள் அலுவலகத்திற்குள் வந்ததும் வராததுமாக பலர் நச்சரித்தார்கள். அவள் ஏற்கனவே குடித்து முடித்துக் கிடந்த எச்சில் கிளாஸ்களை ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொன்றாக எடுக்கப் போனபோது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/239&oldid=636691" இலிருந்து மீள்விக்கப்பட்டது